Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 ஆல்ரவுண்டர்கள்.. இலங்கையுடனான முதல் டி20.. அசுர பலத்தில் இந்திய ப்ளேயிங் 11ஐ உருவாக்கிய ஹர்திக்!

மும்பை: இலங்கை அணியுடனான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனியர் வீரர்கள் இல்லாமல் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது. இதில் முதல் டி20 போட்டி நாளை மாலை மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.

2023ம் ஆண்டின் முதல் போட்டி என்பதால் இரு அணிகளும் படு தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஹர்திக் பாண்ட்யா ஒரு கேப்டனாக 2023ம் ஆண்டையும் வெற்றியுடன் தொடக்க முணைப்புடன் உள்ளார்.

 ஓப்பனிங் ஜோடி

ஓப்பனிங் ஜோடி

இந்நிலையில் இதற்கான ப்ளேயிங் 11-ஐ பலமாக உருவாக்கியுள்ளனர். ஓப்பனிங்கில் ரோகித், கே.எல்.ராகுல் என இருவருமே இல்லை. இந்தியாவுக்காக சமீபத்தில் இரட்டை சதம் அடித்த இஷான் கிஷான், ரஞ்சிக்கோப்பையிலும் சதம் அடித்தார். எனவே அவர் முதன்மை தேர்வாக இருக்கிறார். ஓப்பனிங்கில் அவருக்கு ஜோடியாக ருதுராஜ் கெயிக்வாட் இருக்கிறார். ஆனால் சுப்மன் கில்-ம் அறிமுகமாக அதிக வாய்ப்பு உள்ளன.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

2022ம் ஆண்டு இந்திய டி20 அணியில் கலக்கிய சூர்யகுமார் யாதவ் முதல் விக்கெட்டிற்கு களமிறங்கவுள்ளார். இவர் இந்த முறை துணைக்கேப்டன் என்ற பொறுப்புடன் விளையாடவிருக்கிறார். இவரை தொடர்ந்து 4வது வீரராக சீனியர் வீரர் சஞ்சு சாம்சன் வாய்ப்பு பெறவுள்ளார். இவர் ராஜஸ்தான் அணியிலும் 4வது வீரராக தான் விளையாடியிருந்தார். 5வது வீரராக ஹர்திக் பாண்ட்யா களமிறங்கலாம்.

 3 ஆல்ரவுண்டர்கள்

3 ஆல்ரவுண்டர்கள்

ஹர்திக் பாண்ட்யாவுடன் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகிய இருவரும் கைக்கோர்க்கவுள்ளனர். இவர்கள் இருவருமே சுழற்பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் நல்ல பலன் கொடுப்பார்கள். மற்றொரு ஸ்பின்னராக யுவேந்திர சாஹல் அணியில் சேர்க்கப்படுவார். 3 ஸ்பின்னர்கள் மற்றும் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற கணக்கில் இந்தியா களமிறங்குகிறது.

 வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சாளர்கள்

டாப் ஆர்டரில் ஹர்திக் பாண்ட்யா வேகப்பந்துவீச்சாளராக இருப்பார். முழு நேர பவுலர்களாக ஹர்ஷல் பட்டேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் கூட்டணி சேரவுள்ளனர். இதில் ஹர்ஷல் பட்டேல் இருப்பது பேட்டிங் ஆழத்திற்கு உதவும். இந்தியாவின் எதிர்காலமாக பார்க்கப்படும் உம்ரான் மாலிக்கிற்கும் வாய்ப்பு தரப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

இஷான் கிஷான், ருதுராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுவேந்திர சாஹல்

Story first published: Monday, January 2, 2023, 19:12 [IST]
Other articles published on Jan 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+