தமிழக வீரருக்கு ஜாக்பாட்??.. 2வது ஒருநாள் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11.. தவான் அதிரடி முடிவு!
ராஞ்சி: தென்னாப்பிரிக்க அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா முக்கிய மாற்றங்களை செய்யவுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் ராஞ்சியில் நடைபெறவுள்ளது.
3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1 - 0 என முன்னிலையில் இருப்பதால் இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டும். இதற்காக ப்ளேயிங் 11ல் மாற்றம் கொண்டு வரவுள்ளது.

பேட்டிங்
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பினர். எனவே இன்று அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். ஓப்பனிங்கை பொறுத்தவரையில் மீண்டும் ஷிகர் தவான் - சுப்மன் கில் ஜோடி களமிறங்குவார்கள். முதல் போட்டியில் சொதப்பினாலும் இஷான் கிஷான், ருதுராஜ் கெயிக்வாட் ஆகிய இருவருக்குமே வாய்ப்பு தரப்படவுள்ளது.

பலமான மிடில் ஆர்டர்
மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு பலமாக இருப்பது சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தான். கடந்த போட்டியிலும் இவர்கள் தான் அணியை மீட்டனர். ஆனால் இவர்களுக்கு பின்னால் விளையாட தரமான பேட்ஸ்மேன் இல்லை. எனவே இந்த முறை ஷபாஸ் அகமது-ஐ களமிறக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. முதல் போட்டியில் ரவி பிஷ்னாய் மிக மோசமாக சொதப்பினார். எனவே அவருக்கு மாற்றாக ஆல்ரவுண்டர் சபாஷ் அகமது அறிமுகமாகலாம்.

வாஷிங்டன் சுந்தர்
இது ஒருபுறம் இருக்க, வாஷிங்டன் சுந்தரும் போட்டிக்குள் வந்துள்ளார். தீபக் சஹார் காயம் காரணமாக விலகியதால் வாஷிங்டன் சுந்தர் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். எனினும் வந்த உடனேயே இவருக்கு வாய்ப்பு தருவார்களா என்பது சந்தேகம் தான். இதுமட்டுமல்லாமல் குல்தீப் யாதவும் லெக் ஸ்பின்னர், சுந்தரும் லெக் ஸ்பின்னர் என்பதே ஒரே காம்பினேஷனில் செல்வது ரிக்ஸ் ஆகும்.

வேகப்பந்துவீச்சாளர்கள்
வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் ஆவேஷ் கான் கடந்த போட்டியில் படு மோசமாக செயல்பட்டார். எனினும் தீபக் சஹார் இல்லாததால் வேறு வழியின்றி ஆவேஷ் கானை தான் களமிறக்கவுள்ளனர். இவருக்கு உறுதுணையாக ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

ப்ளேயிங் 11 கணிப்பு
ஷிகர் தவான், சுப்மன் கில், ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், சபாஷ் அகமது, முகமது சிராஜ், ஆவேஷ் கான், குல்தீப் யாதவ்


Click it and Unblock the Notifications