Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 முக்கிய பிரச்சினைகள்.. 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11.. குழப்பத்தில் உள்ள டிராவிட்!

டெல்லி: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டிக்கு ப்ளேயிங் 11ல் தேர்வு செய்வதில் 3 முக்கிய குழப்பங்களை எதிர்கொண்டுள்ளார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

இரு அணிகளுக்கும் இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையில் இந்திய அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 2வது போட்டி நாளை ( பிப்ரவரி 17) தொடங்குகிறது.

இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை காலை 9.30 மணியளவில் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணிகளும் இறுதிகட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினர் என்னதான் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருந்தாலும், மிடில் ஆர்டர் பேட்டிங் சற்று சொதப்பலாக இருந்தது. புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பரத் என முன்னணி வீரர்கள் அனைவருமே சொதப்பினர். ஜடேஜா - அக்‌ஷர் பட்டேல் மற்றும் நிலைத்து நிற்கவில்லை என்றால் சிரமம் ஏற்பட்டிருக்கும். எனவே இந்த முறை அதை சரி செய்தாக வேண்டும்.

ஸ்ரேயாஸ் ஐயர் கம்பேக்

ஸ்ரேயாஸ் ஐயர் கம்பேக்

கடந்த 2022ம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகும். முதுகில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விலகியிருந்த அவர், 2வது டெஸ்ட் போட்டிக்காக மீண்டும் அணிக்குள் இணைந்துள்ளார். மறுபுறம் சூர்யகுமார் யாதவ் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் 8 ரன்களை மட்டுமே அடித்து அவுட்டானார். இதனால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பார்களா? அல்லது ஸ்ரேயாஸ் ஐயரை சேர்ப்பார்களா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஓப்பனிங் ஜோடி

ஓப்பனிங் ஜோடி

நீண்ட நாட்களாக சரியான ஃபார்மில் இல்லாமல் இருந்து வரும் துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் முதல் டெஸ்டிலும் ஏமாற்றினார். இதனால் இனியும் அவருக்கு வாய்ப்பை கொடுத்து ரிஸ்க் எடுக்க வேண்டுமா? அல்லது நல்ல ஃபார்மில் உள்ள சுப்மன் கில்லை மீண்டும் ப்ளேயிங் 11ல் சேர்க்க வேண்டுமா என்ற விவாதம் இந்திய அணிக்குள் சூடுபிடித்து வருகிறது.

ஸ்பின்னர்களின் ஆதிக்கம்

ஸ்பின்னர்களின் ஆதிக்கம்

பவுலிங் துறையை பொறுத்தவரையில் நாக்பூரில் உள்ளதை போன்றே தான் டெல்லியிலும் பிட்ச் செயல்படும். சுழற்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் தான் இங்கும் இருக்கும். எனவே இந்திய அணியில் அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய 3 பேரும் மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளனர். நல்ல ஃபார்மில் உள்ள குல்தீப் யாதவ் இன்னும் சிறிது நாள் காத்திருக்க வேண்டியுள்ளது.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், முகமது சிராஜ், முகமது ஷமி

Story first published: Thursday, February 16, 2023, 18:27 [IST]
Other articles published on Feb 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+