Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் அதே வீரரா.. 3வது ஒருநாள் போட்டிக்கான ப்ளேயிங் 11.. முக்கிய மாற்றம் உறுதி!

டெல்லி: தென்னாப்பிரிக்க அணியுடனான 3வது ஒருநாள் போட்டிக்கான ப்ளேயிங் 11ல் முக்கிய வீரர் கம்பேக் கொடுக்கவுள்ளார்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளன.

தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று மதியம் டெல்லி அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

3வது போட்டி

3வது போட்டி

இந்திய அணிக்கு கடந்த 2 போட்டிகளிலுமே இருந்தது டாப் ஆர்டர் பிரச்சினை தான். டாப் ஆர்டரில் மாற்றம் கொண்டு வருவதற்காகவும், 6வது பவுலரை கொண்டு வருவதற்காகவும் ருதுராஜ் கெயிக்வாட் நீக்கப்பட்டார். மேலும் அவருக்கு மாற்றாக ஆல்ரவுண்டர் சபாஷ் அகமது சேர்க்கப்பட்டிருந்தார். ருதுராஜ் கெயிக்வாட் ஒரே ஒரு போட்டியில் சொதப்பினார் என்பதற்காக அவரை நீக்கியதும் பயனில்லாமல் தான் போனது. ஏனென்றால் 2வது போட்டியிலும் ஓப்பனிங் வீரர்கள் ஏமாற்றினர்.

முக்கிய மாற்றம்

முக்கிய மாற்றம்

இந்நிலையில் இன்றைய போட்டியில் கட்டாயம் ஒரு முக்கிய மாற்றத்தை செய்தே தீர வேண்டும். டெல்லி மைதானத்தில் பவுண்டரி எல்லைகள் மிக குறைந்த தூரத்தில் தான் இருக்கும். இங்கு பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே அதிகம் இருக்கும் என்பதால் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிக்ஸர்கள் பறக்கலாம். இதனால் குல்தீப் யாதவ், சபாஷ் அகமது, ரவி பிஷ்னாய் இவர்களில் ஒருவரை நீக்கியே ஆக வேண்டும்.

ஒரு வீரர் நீக்கம்

ஒரு வீரர் நீக்கம்

அதன்படி பார்த்தால் ஒரு ஸ்பின்னர் நீக்கப்பட்டு கூடுதல் பேட்ஸ்மேனாக மீண்டும் இளம் வீரர் ருதுராஜ் கெயிக்வாட்டை கொண்டு வரவுள்ளனர். குறைந்த வாய்ப்புகள் மட்டுமே கிடைத்து வருவதால் ருதுராஜ் கெயிக்வாட் இந்த போட்டியில் தன்னை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயம் உள்ளது. மற்றபடி அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது எனத் தெரிகிறது.

ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

ஷிகர் தவான், சுப்மன் கில், ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆவேஷ் கான்

Story first published: Tuesday, October 11, 2022, 18:17 [IST]
Other articles published on Oct 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+