Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - இலங்கை டி20 தொடர்.. புதிய கணக்கு போட்ட டிராவிட்.. அட்டகாசமான ப்ளேயிங் 11 ரெடி -முழு விவரம்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3 போட்டிகள் டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது.

இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் போட்டித்தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய நிலையில் டி20 தொடர் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,

 ஓப்பனிங் ஜோடி

ஓப்பனிங் ஜோடி

ஒருநாள் போட்டி தொடர் முழுவதுமே பிரித்வி ஷாவுக்கு மட்டுமே ஓப்பனிங் களமிறங்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதனால் இளம் வீரர்கள் தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட் ஆகிய இருவருமே வெளியில் அமர்ந்திருந்தனர். எனவே முதல் டி20 போட்டியில் இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் ஓப்பனிங் களமிறங்க வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக தேவ்தத் பட்டிக்கல் மீது டிராவிட் அதிக நம்பிக்கை வைத்திருப்பதால் அவர் தான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மிடில் ஆர்டரில் யார்

மிடில் ஆர்டரில் யார்

ஒருநாள் போட்டியில் அரை சதம் அடித்து அசத்திய இஷான் கிஷான் டி20 போட்டியிலும் முதல் விக்கெட்டிற்கு களமிறங்கவுள்ளார். சூர்யகுமார் யாதவ் நல்ல ஃபார்மில் இருப்பதால், டி20 தொடரில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவுள்ளது. ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணால் பாண்ட்யா களமிறங்குவார்கள். ஹர்திக் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி வருவதால் டி20 தொடரில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பவுலிங் படை

பவுலிங் படை

பந்துவீச்சை பொறுத்தவரை துணை கேப்டன் புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், நவ்தீப் சைனி களமிறங்கவுள்ளனர். ஸ்பின்னிங்க் படையில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இலங்கை தொடரில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார். எனவே அவர் முதல் டி20 போட்டியில் நிச்சயம் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2வது ஸ்பின்னராக ராகுல் சஹார் களமிறங்குவாரா அல்லது யுவேந்திர சாஹல் களமிறங்குவாரா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

ஷிகர் தவான், தேவ்தத் பட்டிக்கல், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, க்ருணால் பாண்ட்யா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், நவ்தீப் சைனி, ராகுல் சஹார், வருண் சக்கரவர்த்தி

Story first published: Saturday, July 24, 2021, 22:10 [IST]
Other articles published on Jul 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+