Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேகமாக வந்த சாஸ்திரி.. கோலியுடன் திடீர் ஆலோசனை.. டெஸ்ட் டீமில் அடுத்தடுத்து 3 பேர் நீக்கம்.. ஷாக்!

அஹமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆட போகும் இந்திய அணியில் இருந்து மூன்று வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிகவும் சிறப்பாக ஆடி வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்திய அணியில் எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவி உள்ளனர். இதன் மூலம் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது.

மூன்றாவது டெஸ்ட்

மூன்றாவது டெஸ்ட்

இந்த நிலையில் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளை அஹமதாபாத் மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு நடந்து வருகிறது. இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிங்க் பால் டெஸ்ட் போட்டியாகும்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஆட போகும் இந்திய அணியில் இருந்து மூன்று வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று மாலை இதற்காக அவசரமாக மீட்டிங் நடந்து இருக்கிறது. இதன் பின் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

மாற்றம்

மாற்றம்

அதன்படி இந்திய அணியில் இருந்து ஷரத்துல் தாக்கூர் நீக்கப்பட உள்ளார். இவரை ஒருநாள் அணிக்கு கொண்டு வரும் விதமாக அவர் நீக்கப்பட உள்ளார். உமேஷ் யாதவ் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்ப இருக்கிறார். ஆனால் இது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

நீக்கம்

நீக்கம்

இது போக ஸ்டான்ட் பை வீரராக அறிவிக்கப்பட்டு இருந்த நதீம், அபிமன்யூ ஈஸ்வரன், பிரியங் பாஞ்சல் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு பதிலாக கே.எஸ் பாரத், ராகுல் சாகர் போன்ற வீரர்கள் அணிக்குள் ஸ்டான்ட் பை வீரர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

ஏன்

ஏன்

நதீம் முதல் டெஸ்டில் சரியாக ஆடாத நிலையில் நீக்கப்பட்டு உள்ளார். அபிமன்யூ ஈஸ்வரன், பிரியங் பாஞ்சல் இருவரும் வலைப்பயிற்சியில் சரியாக பவுலிங் செய்யவில்லை. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு

அறிவிப்பு

அதன்படி இந்திய அணியில் கோலி, ரோஹித் சர்மா , ரஹானே , புஜாரா, மயங்க் அகர்வால், சுப்மான் கில், ராகுல், பாண்டியா, பண்ட், சாகா, அஸ்வின், குல்தீப் , அக்சர் பட்டேல், பும்ரா, சுந்தர், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Story first published: Thursday, February 18, 2021, 11:07 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+