For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிசிசிஐ தேர்வு செய்த 20 பேர்.. உலகக்கோப்பைக்காக இறுதி செய்யப்பட்ட வீரர்கள்..யார் யார்? - முழு விவரம்

மும்பை: உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணியின் திட்டத்தில் ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படும் 20 வீரர்கள் யார் ? யார் ? என்பது குறித்த முழு தகவலையும் பார்க்கலாம்.

2023ம் ஆண்டின் முதல் தினத்திலேயே பிசிசிஐ-ன் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா, ரோஜர் பின்னி, ராகுல் டிராவிட், ஜெய் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய அணியின் திட்டங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. அதன்படி வீரர்கள் தேர்வு குறித்தும் அறிவிப்பு வெளியானது.

20 பேர் பட்டியல்

20 பேர் பட்டியல்

அதாவது 50 ஓவர் உலகக்கோப்பை இந்தாண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் தான் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியின் திட்டத்திற்காக 20 வீரர்கள் தற்போதே தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். இவர்கள் 20 பேருக்கு தான் தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுத்து தயார்ப்படுத்தவுள்ளனர். அதற்கு மேல் உள்ளவர்கள் ஆச்சரியம் தரும் செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். அந்த 20 பேர் யார்? யார்? என்பதை பார்க்கலாம்.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

ஓப்பனிங்கை பொறுத்தரையில் கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷான், சுப்மன் கில், ஷிகர் தவான் என 4 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். இதில் இஷான் கிஷான் சமீபத்தில் இரட்டை சதம் அடித்து ஆச்சரியம் தந்தார். சீனியர் வீரரான ஷிகர் தவான் அடுத்து வரவுள்ள ஒரு சில போட்டிகளில் தன்னை நிரூபித்தால் மட்டுமே அணிக்குள் இருப்பார். இல்லையென்றால் 20 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம்.

பலமான மிடில் ஆர்டர்

பலமான மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர் பேட்டிங்கில் தற்போது நன்கு செட்டாகியுள்ள விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. கே.எல்.ராகுலின் ஃபார்ம் சற்று கவலைக்கிடமாக இருந்தாலும் அவர் அணிக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இதே போல சமீபத்தில் விபத்தில் சிக்கியிருந்த ரிஷப் பண்ட்-ம் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் அதற்குள் தயார் ஆகிவிடுவார் எனத் தெரிகிறது.

ஆல்ரவுண்டர்கள்

ஆல்ரவுண்டர்கள்

லோயர் ஆர்டர் மற்றும் ஆல்ரவுண்டர்களில் துணைக்கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ரவீந்திர ஜடேஜா ஆகிய இரண்டு அதிரடி வீரர்கள் உள்ளனர். இவர்களுடன் சேர்த்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. முழு நேர சுழற்பந்துவீச்சு என்றால் யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

வேகப்பந்துவீச்சாளர்கள்

வேகப்பந்துவீச்சாளர்கள்

இந்திய அணிக்கு சமீப காலமாக வேகப்பந்துவீச்சு தான் சொதப்பி வருகிறது. எனவே முன்னணி வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் என 3 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களை சுற்றி இளம் வீரர்களான முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் ஆகிய 3 பேரும் விளையாடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Story first published: Monday, January 2, 2023, 18:11 [IST]
Other articles published on Jan 2, 2023
English summary
BCCI BCCI shortlisted the 20 man squad of Team India for the 2023 World Cup plan, here is the complete list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+