Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எந்நாளும் தனிமை.. மூச்சு முட்டிய இந்திய அணிக்கு.. "இன்ட்ரா - ஸ்குவாட்" கிரிக்கெட் மூலம் விடிவுகாலம்

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகும் விதமாக, இந்திய அணி இப்போது இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட்டில் விளையாடுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இதற்காக வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இந்திய அணி இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது.

 சீரியஸ் கிரிக்கெட்

சீரியஸ் கிரிக்கெட்

அதென்ன இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட்? ரொம்ப சிம்பிள். பொதுவாக முக்கியமான டெஸ்ட் தொடர் அல்லது ஒருநாள் தொடர்களுக்கு முன்பாக, அணிகள் தங்களுக்குள் இரண்டு அணிகளாக பிரிந்து கிரிக்கெட் ஆடுவது தான் இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட். அதற்கு இரு கேப்டன்கள், குறிப்பிட்ட ஓவர்கள் என்று சீரியஸான மேட்ச்சாகவே விளையாடுவார்கள்.

 ராகுல் கேப்டன்

ராகுல் கேப்டன்

இந்த வருடன் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்த இந்திய அணி, அங்கு இதுபோல் இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட்டில் விளையாடியது. ஒரு அணிக்கு விராட் கோலி கேப்டனாகவும், மற்றொரு அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாகவும் செயல்பட்டனர். தலா 40 ஓவர் கிரிக்கெட் போட்டியாக ஆடிய அந்த ஆட்டத்தில், கோலி அணியே வென்றது.

 கடுமையான குவாரண்டைன்

கடுமையான குவாரண்டைன்

அதுபோல தான் இன்றும், சவுத்தாம்ப்டன் நகரில், இந்திய அணி இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. இத்தனை நாட்களாக இங்கிலாந்தில் கடுமையான குவாராண்டைனில் இருந்த இந்திய அணிக்கு பயிற்சிப் போட்டிகள் என்று எதுவுமில்லை. எனவே, இந்த இன்ட்ரா - ஸ்குவாட் கிரிக்கெட் அவர்களது திறனை, ஃபார்மை சோதிக்கும் முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது.

 ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் கண்டிப்பாக கேப்டன் விராட் கோலியாலும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியாலும் கவனிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக ரோஹித், ரிஷப் பண்ட், மாயங்க் அகர்வால், ஷுப்மன் கில் ஆகியோர் தங்களது பேட்டிங் ஃபார்மை பரிசோதனை செய்ய இப்போட்டி கண்டிப்பாக உதவும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Friday, June 11, 2021, 20:59 [IST]
Other articles published on Jun 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+