Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலகக்கோப்பை: இந்திய அணி போட்டி நேரங்கள் இதுதான்.. ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு நேரம் - விவரம்!

பெர்த்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டி நேரங்கள் குறித்து தகவல் தெரியவந்துள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ளது.

இதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்தியாவின் போட்டிகள்

இந்தியாவின் போட்டிகள்

இந்த தொடரில் ஒரு குரூப்பிற்கு 6 அணிகள் என்ற வீதத்தில் 2 குரூப்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, பாகிஸ்தா, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதற்காக ஒருவாரத்திற்கு முன்பாகவே ஆஸ்திரேலியா சென்றடைந்த ரோகித் படை பயிற்சி போட்டிகளில் மோதி வருகின்றன.

போட்டிகளின் நேரங்கள்

போட்டிகளின் நேரங்கள்

இந்நிலையில் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் போட்டி நேரங்கள் குறித்து தெரியவந்துள்ளது. அக்டோபர் 23ம் தேதி பாகிஸ்தானுடனான போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கவுள்ளது. தகுதிச்சுற்றில் இடம்பெற்ற அணியுடன் வரும் அக்டோபர் 27ல் மோதுகிறது. இந்த போட்டி மதியம் 12.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறுபடும் நேரங்கள்

மாறுபடும் நேரங்கள்

இந்தியா தனது 3வது போட்டியாக தென்னாப்பிரிக்காவை வரும் அக்டோபர் 30ம் தேதி எதிர்கொள்கிறது. பெர்த்தில் நடைபெறும் இந்த போட்டி பிற்பகல் 4.30 மணிக்கு தொடங்கும். இதனை தொடர்ந்து நவம்பர் 2ம் தேதி வங்கதேசத்துடனும், நவம்பர் 6ம் தேதியன்று தகுதிச்சுற்றில் இடம்பெற்ற அணியுடனும் மோதுகிறது. இந்த இரண்டு போட்டிகளுமே மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி ஆட்டங்கள்

பயிற்சி ஆட்டங்கள்

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு அணியுடன் 2 பயிற்சி போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 17ம் தேதி ஆஸ்திரேலிய அணியுடனும், அக்டோபர் 19ம் தேதி நியூசிலாந்து அணியுடனும் பயிற்சி போட்டிகளில் மோதவுள்ளது.

Story first published: Friday, October 14, 2022, 12:08 [IST]
Other articles published on Oct 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+