வீரர்களுக்கு கட்டாயம்.. இன்று தொடங்குகிறது முதல் போட்டி.. இலங்கையை எப்படி சமாளிக்கப்போகிறது இந்தியா?
கொழும்பு: இந்திய ஏ அணி மற்றும் இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது.
Recommended Video
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மோதுகிறது.
கடந்த ஜூலை 13ம் தேதியே தொடங்கவிருந்த இந்த போட்டி கொரோனா காரணமாக இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இலங்கை தொடர்
இந்தியாவின் சீனியர் வீரர்கள் இங்கிலாந்து சென்றிருப்பதால், இலங்கை தொடரில் இளம் வீரர்களை கொண்ட ஏ அணி பங்கேற்கிறது. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அனைவருக்கும் இதில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், புவனேஷ்வர்குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

ஐபிஎல் ஸ்டார்கள்
மொத்தம் 20 பேர் கொண்ட இந்திய அணியில் தேவ்தத் பட்டிக்கல், சஞ்சு சாம்சன், ருத்ராஜ் கெயிக்வாட் உள்ளிட்ட 6 வீரர்கள் தங்களது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் காலெடுத்து வைக்கவுள்ளனர். 14 வீரர்கள் ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள். எனவே இலங்கையின் மெயின் அணியை இந்திய அணி சமாளிக்கும் என்றே முன்னாள் வீரர்கள் கூறுகின்றனர்.

சீனியர் வீரர்கள்
சூர்யகுமார் யாதவ், க்ருணால் பாண்ட்யா ஆகிய வீரர்கள் தங்களது முதல் சர்வதேச போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்கள். ஐபிஎல்-ல் அவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்ததால், அதனை தற்போது சர்வதேச போட்டிகளில் செயல்படுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

வீரர்களுக்கு கட்டாயம்
இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெறும் ப்ரேமதசா மைதானம், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக விளங்கும் என தெரிகிறது. இந்திய அணியில் சரிவர வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் குல்தீப் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இந்த போட்டியை சாதகமாக பயன்படுத்திக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ஹர்திக், ஷிகர் தவான், மணிஷ் பாண்டே ஆகிய வீரர்கள் டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்த தொடரில் சிறப்பாக செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பயிற்சியாளர் டிராவிட்டும் வீரர்களை கடுமையான முறையில் தயார் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இலங்கையின் ஃபார்ம்
இலங்கையின் மெயின் அணி களமிறங்கினாலும், அதிலும் அனுபவம் குறைந்த வீரர்களே உள்ளனர். கடந்த சில தொடர்களில் இலங்கை அணி மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் படு மோசமாக தோல்வியை தழுவியது. தற்போது 2 சீனியர் வீரர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். 3 வீரர்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவின் ஏ அணியை சமாளிப்பதே இலங்கைக்கு சிரமமாக இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications