Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிட்ச் செய்த துரோகம்.. முதல் டெஸ்டில் வங்கதேசத்திற்கு அடித்த லக்.. என்ன செய்யப்போகிறது இந்திய அணி??

சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் பிட்ச்-ன் தன்மையால் பெரும் ஏமாற்றத்தை கண்டுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதனையடுத்து களமிறங்கி முதல் இன்னிங்ஸில் 404 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 258 ரன்களும் அடித்து அசத்தியது. இதனால் வங்கதேச அணி வெற்றி பெற 513 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

ஆட்டத்தின் 3வது நாளின் பாதியில் இந்திய அணி இந்த இலக்கை நிர்ணயித்தது. பின்னர் ஆடிய வங்கதேச அணி 3வது நாளின் முடிவு வரை 42 ரன்களுக்கு விக்கெட் இழப்பு ஏதும் இன்றி களத்தில் இருந்தது. இரண்டரை நாட்கள் முழுவதுமாக இருந்தும் இந்திய அணி 513 ரன்களுடன் டிக்ளெர் செய்ததற்கு காரணம், கடைசி 2 நாட்களில் பிட்ச் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் தான்.

இந்திய அணிக்கு ஏமாற்றம்

இந்திய அணிக்கு ஏமாற்றம்

இந்நிலையில் இந்தியா நினைத்த விஷயங்கள் முற்றிலும் ஏமாற்றத்தை கொடுத்தது. ஏனென்றால் இன்று வழக்கத்திற்கு மாறாக பிட்ச்-ல் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எந்தவித டேர்னுமே இல்லை. மாறாக ஸ்பின்னர்களை தான் எதிரணி பேட்ஸ்மேன்கள் தேடி தேடி அடித்தனர். இதனால் முதல் விக்கெட்டிற்கு மட்டும் 124 ரன்களை சேர்த்தது. ஒருகட்டத்தில் இந்தியாவின் இலக்கு குறைவாக இருந்துவிட்டதோ என்ற எண்ணம் ரசிகர்களிடம் வந்துவிட்டது.

அஸ்வின் மேஜிக்

அஸ்வின் மேஜிக்

வழக்கமாக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தனது பவுலிங்கில் நிறைய வித்தியாசங்களை கொண்டு வருவார். இந்த முறை அவரின் மாயாஜாலங்களும் பலன் கொடுக்கவில்லை. இறுதியாக வேகப்பந்துவீச்சாளரான உமேஷ் யாதவ் தான் பெரிய திருப்புமுணையை ஏற்படுத்தி கொடுத்தார். அதன்பின்னர் தான் ஸ்பின்னர்களுக்கு ஓரளவிற்காவது உதவி கிடைத்தது.

இறுதியில் ட்விஸ்ட்

இறுதியில் ட்விஸ்ட்

அக்‌ஷர் பட்டேலின் சுழலில் சிக்கி வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து சரிந்தனர். இதனால் வங்கதேச அணி 272 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. களத்தில் சகிப் அல் ஹாசன் 40 ரன்களுடனும், மெஹிடி ஹாசன் 9 ரன்களுடனும் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். கடைசி நாளான நாளையாவது இந்தியாவின் கணிப்பு சரியாக இருக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Saturday, December 17, 2022, 18:52 [IST]
Other articles published on Dec 17, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+