Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐயோ.. மீடியாவா..? அலறி ஓடும் இந்திய அணி நிர்வாகம்... ஆதங்கத்தில் செய்தியாளர்கள்!

மெல்போர்ன்: இந்திய அணி நிர்வாகம் பத்திரிகையாளர்களிடமிருந்து விலகியே நிற்பதால் செய்தி சேகரிக்க ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் முகாமிட்டுள்ள இந்திய செய்தியாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஐசிசி விதிமுறைகள் படி, உலக கோப்பையின் ஒவ்வொரு போட்டிக்கு முந்தைய நாளும், போட்டி முடிந்த பிறகும் செய்தியாளர்களை சம்மந்தப்பட்ட அணி கேப்டன் சந்தித்து பேட்டியளிக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால் வேறு எப்போது வேண்டுமானாலும் பேட்டியளிக்க தடையும் கிடையாது.
ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற அணிகள் தினசரியோ, அல்லது ஒருநாள் விட்டு மற்றொரு நாளோ செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.

வேண்டா வெறுப்பாக பிரஸ் மீட்

வேண்டா வெறுப்பாக பிரஸ் மீட்

ஆனால் இந்திய அணியோ, ஐசிசியின் கட்டாயத்திற்காக மட்டுமே பிரஸ் மீட் செய்ய டோணியை அனுப்பி வைக்கிறது. மற்ற நாட்களில் பத்திரிகையாளர்களை கண்டாலே காத தூரம் ஓடுகின்னர் இந்திய அணி வீரர்களும், நிர்வாகிகளும்.

போனையாவது எடுங்கப்பா

போனையாவது எடுங்கப்பா

இந்திய அணி மேனேஜர் அவ்வப்போது இ-மெயில் மூலமாகத்தான் தகவல்களை அனுப்புகிறாரே தவிர போனை எடுத்தும் பேசுவது கிடையாது. அஷ்வினுக்கு நேற்றைய பயிற்சி ஆட்டத்தின்போது காயம் பட்டுவிட்டதாமே என கேட்க போன் மேல் போன் செய்த நிருபர்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இவர்கள் தொல்லை தாங்க முடியாமல் அணியின் செய்தி தொடர்பாளர் ஒரு பிரஸ் ரிலீசை இ-மெயில் மூலம் அனுப்பி வைத்து, 'அனைவரும் நலம்' என்பதோடு முடித்துக் கொண்டார்.

பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு மூச்விடவில்லை

பாகிஸ்தான் போட்டிக்கு பிறகு மூச்விடவில்லை

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றிக்கு பிறகு டோணி பேட்டியளித்தார். ஆனால் கடந்த நான்கு நாட்களாக எந்த ஒரு அணி வீரரும் பத்திரிகையாளர்களை சந்திக்கவேயில்லை. தனிப்பட்ட முறையில் கூட எந்த பத்திரிகைக்கும் பேட்டியளிக்கவில்லை.

பத்திரிகையாளர்கள் அதிருப்தி

பத்திரிகையாளர்கள் அதிருப்தி

"மீடியாக்கள் மீதான அவநம்பிக்கைதான் கிரிக்கெட் வாரியத்தை முகம் திருப்ப செய்துள்ளது" என்கிறார் மூத்த விளையாட்டு பிரிவு பத்திரிகையாளர் கவுசிக். "பிசிசிஐ மீடியாக்களை கண்டுகொள்ளவும் இல்லை, அவர்களின் தேவைகள் குறித்து கவலைப்படவும் இல்லை" என்கிறார் மற்றொரு முன்னணி பத்திரிகையின் நிருபரான நீரு பாட்டியா.

அப்போவே அப்படித்தான்..

அப்போவே அப்படித்தான்..

மீடியாக்களுக்கும், பிசிசிஐக்கும் இடையே 2009லேயே சண்டை முட்டிக் கொண்டது. 2009ல் இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டிகளின்போது இந்திய வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக ஒரு செய்தித்தாள் வெளியிட்ட செய்தி பிசிசிஐக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த டோணி, எழுதி கொடுத்ததை வாசித்துவிட்டு, கேள்விக்கே இடமில்லை என்று கூறி எழுந்து சென்றுவிட்டார். பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்த ஐசிசியின் மீடியா நிர்வாக அதிகாரிகளுக்கே அது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. பத்திரிகையாளர்களுக்கு ஆத்திரத்தை கொடுத்தது.

கடுப்பில் டோணி

கடுப்பில் டோணி

இதில் கொசுறு தகவல் என்னவென்றால், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியையொட்டி முந்தைய நாளில் நடைபெற உள்ள செய்தியாளர் சந்திப்பை கேப்டன் டோணி புறக்கணித்து விட்டாராம். துணை கேப்டன் கோஹ்லிதான் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு முந்தைய நாள் போட்டியின்போது, செய்தியாளர்களுடன் பல விஷயங்களில் டோணி முட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

உள்ளதை சொல்வோம்.. நல்லதை செய்வோம்..

உள்ளதை சொல்வோம்.. நல்லதை செய்வோம்..

இதுவரை மீடியா ரிப்போர்ட் செய்த எந்த ஒரு கிசுகிசுவுமே ராங்காக போனதில்லை. அத்தனையும் நடந்துதான் வருகிறது. அதன் சமீபத்திய உதாரணம்தான் டீமுக்குள் கோஹ்லி-டோணி அணி என பிரிந்துள்ளதாக வெளியான செய்தி. தகவல் வந்த சில நாளிலேயே டோணி டெஸ்ட் விளையாட்டுக்கே குட்பை சொன்னார். எனவே மீடியாக்கள் சொல்வதை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளாமல் மீடியாவை மொத்தமாக புறக்கணிப்பது எந்த வகையில் நியாயம்?

Story first published: Thursday, February 19, 2015, 15:44 [IST]
Other articles published on Feb 19, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+