Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அப்போ எல்லாமே பொய்யா”.. நியூஸி,க்கு எதிரான முதல் டெஸ்ட்.. பிசிசிஐ முடிவால் சோகத்தில் முக்கிய வீரர்!

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் ப்ளேயிங் 11ல் அனைவரும் எதிர்பார்த்த முக்கிய வீரர் இருக்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் வரும் அக்டோபர் 25ம் தேதி தொடங்குகிறது.

இதற்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது ரசிகர்களிடையே பேசுப்பொருளாக உள்ளது.

 இந்திய ப்ளேயிங் 11

இந்திய ப்ளேயிங் 11

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, பும்ரா போன்றவர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி மட்டும் 2வது டெஸ்ட் போட்டியின்போது அணிக்கு திரும்புவார் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே முதல் டெஸ்ட் போட்டியில் அஜிங்கியா ரகானே தலைமையில் இந்திய அணி விளையாடவிருக்கிறது. அதில் விளையாடுவதற்காக இளம் வீரர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

காத்திருந்த சூர்யகுமார்

காத்திருந்த சூர்யகுமார்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கலக்கிய கே.எல்.ராகுல் நியூசிலாந்து தொடரில் ஓப்பனிங் ஸ்பாட்டை உறுதி செய்துவிட்டார். அவருடன் சேர்ந்து மயங்க் அகர்வால் களமிறங்குவார் எனத்தெரிகிறது. முதல் விக்கெட்டிற்கு வழக்கம் போல புஜாரா களமிறங்க, விராட் கோலியின் இடத்திற்கு சூர்யகுமார் யாதவ் அறிமுகப்படுத்தப்படுவார் எனத் தகவல் வெளியானது. அதன்படி அவர் அணி பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். ஏற்கனவே டி20 தொடரின் போது கோலியின் இடத்தில் களமிறங்கிய சூர்யகுமார், டெஸ்ட் தொடரிலும் பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தன.

ஏமாற்றமே மிஞ்சியது

ஏமாற்றமே மிஞ்சியது

இந்நிலையில் அதற்கு பிசிசிஐ தரப்பு தயாராக இல்லை என்பது போல தெரிகிறது. ஏனென்றால் விராட் கோலியின் இடத்திற்காக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் பெரும்பாலும் சுப்மன் கில்லின் பெயர் இறுதி செய்யப்படலாம். அவருக்கு அடுத்தபடியாக ரகானே, சாஹா என பேட்டிங் வரிசை உள்ளன.

Recommended Video

New Zealand Test தொடர் Rahane-க்கு மிக முக்கியம்.. எச்சரிக்கும் Akash Chopra
சிறந்த புள்ளிவிவரம்

சிறந்த புள்ளிவிவரம்

இந்தாண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான சூர்யகுமார் சிறப்பான ஆட்டத்தால் ஜூலை மாதத்திலேயே ஒருநாள் போட்டியிலும் தடம் பதித்தார். இந்நிலையில் இதே ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமாவார் என எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. 31 வயதாகும் சூர்யகுமார் யாதவ், இதுவரை 77 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 14 சதம் மற்றும் 26 அரைசதத்துடன் 5,356 ரன்களை அவர் சேர்த்துள்ளார். அவரின் சராசரி 44 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 25, 2021, 20:18 [IST]
Other articles published on Nov 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+