Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs இங்கிலாந்து: சென்னை 'போடா வெண்ணெய்' என்று உணர்த்திய தருணங்கள்

சென்னை: கொரோனா காலத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இப்போது தான் இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. வரும் 5ம் தேதி சென்னையில் நடக்கும் இப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் தங்களது முதல் டெஸ்ட் போட்டியில் களம் காண்கின்றன.

நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் தான் நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை. எனினும், பிப்.13ம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கணிசமான அளவுக்கு ரசிகர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை சைலண்ட்டாக பீஸ் பீஸாக்கிய இந்திய அணி, தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்தை எதிர்கொள்வதால் இத்தொடர் மீது வழக்கத்தை விட கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. இது ஒருபக்கம் இருக்க, அப்படியே சென்னையில் இரு அணிகளின் ஹிஸ்டரி குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

 சென்னையில் முதன் முதலாக

சென்னையில் முதன் முதலாக

சென்னையில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் முதன் முறையாக 1934ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் மோதின. அப்போது முதல் இதுவரை சேப்பாக் மைதானத்தில் இவ்விரு அணிகளும் 9 முறை மோதியுள்ளன. அதில் இந்தியா 5 வெற்றியும், இங்கிலாந்து 3 வெற்றியும் பதிவு செய்ய, ஒரேயொரு போட்டி மட்டும் டிராவானது. ஆனால், 1985க்கு பிறகு இங்கிலாந்து சென்னையில் வெற்றிப் பெற்றதில்லை.

 டபுள் செஞ்சுரி மிஸ்

டபுள் செஞ்சுரி மிஸ்

2016ம் ஆண்டு இங்கிலாந்து, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், 3-0 என்று தொடரை இந்தியா ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், சென்னையில் நடந்த கடைசிப் போட்டியில் இரு அணிகளும் மோதின. இதில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து 477 ரன்கள் எடுத்தாலும், கொடூரமாக ஆடிய இந்தியா 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சிறப்பாக ஆடிய லோகேஷ் ராகுல் 199 ரன்களில் அவுட்டானார்.

 முச்சதம் கண்ட சேப்பாக்

முச்சதம் கண்ட சேப்பாக்

மிடில் ஆர்டரில் இறங்கி மிகச் சிறப்பாக விளையாடிய கருண் நாயர் 381 பந்துகளில் 303 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்ததை சென்னை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள்.

 இங்கி., படுதோல்வி

இங்கி., படுதோல்வி

ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் ஜடேஜாவின் ஸ்லோ லெஃப்ட் ஆர்ம் ஆர்தடாக்ஸ் பவுலிங்கில் சிக்கி சின்னாபின்னமான இங்கி., 207 ரன்களில் மங்கி, இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் அடங்கிப் போனது. எனினும், இவையெல்லாம் கடந்த கால சாதனைகள். இவற்றை மீறி ஜோ ரூட் & கோ ஏதாவது அதிசயம், அற்புதத்தை எதிர்வரும் தொடரில் நிகழ்த்துகிறதா என்று பார்க்கலாம்.

Story first published: Wednesday, February 3, 2021, 15:52 [IST]
Other articles published on Feb 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+