Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“44 நாட்கள் வெளியே வரக்கூடாது” தென்னாப்பிரிக்க டூரில் பிசிசிஐ கரார்.. அதிர்ச்சியில் ஆழ்ந்த வீரர்கள்

மும்பை: இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா செல்வதற்கான புதிய பயன திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அங்கு இரு அணிகளும் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன.

 தென்னாப்பிரிக்க டூர்

தென்னாப்பிரிக்க டூர்

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகள் கொண்ட தொடர் திட்டமிடப்பட்டிருந்தன. மேலும் டிசம்பர் 16ம் தேதியே போட்டிகள் தொடங்கவிருந்தன. பின்னர் ஓமிக்ரான் வைரஸ் தாக்கத்தால் டி20 தொடர் ரத்து செய்யப்பட்டது. மேலும் போட்டிகளும் டிசம்பர் 26ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

பயண திட்டங்கள்

பயண திட்டங்கள்

இந்நிலையில் இந்திய அணியின் பயண திட்டங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அனைத்து வீரர்களும் டிசம்பர் 12ம் தேதிக்குள்ளாக மும்பை தனியார் ஹோட்டலில் ஏற்படுத்தப்பட்டுள்ள பயோ பபுளுக்குள் சென்றுவிட வேண்டும். அங்கு 4 நாட்கள் பபுளில் இருக்கும் அவர்கள் வரும் டிசம்பர் 16ம் தேதியன்று தனி விமானம் மூலம் தென்னாப்பிரிக்கா புறப்படுகின்றனர்.

 பயோ பபுள்

பயோ பபுள்

அங்கு சென்ற பிறகும் தனியார் ஹோட்டலில் பயோ பபுள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வீரர்களும் அதன் விதிமுறை படியே இருக்க வேண்டும். இதில் டெஸ்ட் தொடர் டிசம்பர் 26ம் தேதி தொடங்கி, ஜனவரி 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இதே போல ஒருநாள் போட்டிகள் ஜனவரி 19ல் தொடங்கி ஜனவரி 23ம் தேதி முடிகிறது. இந்த கணக்குள் படி பார்த்தால் மொத்தம் 44 நாட்கள் இந்திய வீரர்கள் பயோ பபுள் பாதுகாப்பில் இருக்கவுள்ளனர்.

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

வழக்கமாக இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டால் போட்டிகள் முடிந்தவுடன் வீரர்கள் தனிப்பட்ட முறையில் ஊர்சுற்ற கிளம்பிவிடுவார்கள். ஆனால் இந்த முறை பயோ பபுள் நாட்களில் எந்த வீரர்களுக்கும் வெளியே செல்ல அனுமதி இல்லை எனத்தெரிகிறது.

Recommended Video

இந்திய வீரர்களுக்கு உத்தரவு போட்ட Rahul Dravid ஏன் தெரியுமா? | Oneindia Tamil
ஒருநாள் அணி எது?

ஒருநாள் அணி எது?

தற்போது வரை டெஸ்ட் தொடருக்காக மட்டும் தான் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கான வீரர்களின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் நாளை அவை அறிவிக்கப்பட்டு, பயோ பபுளுக்குள் வீரர்கள் கொண்டு வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, December 10, 2021, 22:18 [IST]
Other articles published on Dec 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+