வீழ்ந்தது வங்கதேசம்.. ஆனால் பதற்றம் பாகிஸ்தானுக்கு.. கெத்து காட்டிய இந்திய அணி.. எப்படி தெரியுமா??
டாக்கா: வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
டாக்காவில் நடைபெற்று வந்த 2வது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி நிர்ணயித்த 145 ரன்கள் இலக்கை இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து த்ரில்லர் வெற்றியை பெற்றது.
இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2 - 0 என ஒயிட் வாஷ் செய்தது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்
இந்த தொடருக்கான புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 76.92 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. பாகிஸ்தான் அணி சுலபமாக இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் சொந்த மண்ணில் இங்கிலாந்துடன் ஒயிட் வாஷ் ஆனதால் பாகிஸ்தானின் வெற்றி சதவீதம் 38.89% என குறைந்து இறுதிப்போடிக்கான வாய்ப்பு மிகவும் கடினமானது.

புள்ளிப்பட்டியலில் மாற்றம்
இது ஒருபுறம் இருக்க, இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தியிருப்பதால் 58.93 வெற்றி சதவீதத்துடன் 2வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சொந்த மண்ணில் நடக்கிறது. இதில் இந்தியா 3 வெற்றி பெற்றால் கூட சுலபமாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிடும்.

பாகிஸ்தானுக்கு ஏன் சிக்கல்
இந்தியா இப்படி பலமாக இருப்பதால் பாகிஸ்தானுக்கு சிக்கல் உண்டாகியுள்ளது. ஏனென்றால் அந்த அணி இனி இறுதி சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால், ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா தோல்வியடைய வேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும். இதனையெல்லாம் விட முக்கியம் நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் வெல்ல வேண்டும். இதனையெல்லாம் தாண்டி தான் செல்ல முடியும்.

தென்னாப்பிரிக்க அணி
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இருக்கிறது. ஒருவேளை ஆஸ்திரேலியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றுவிட்டால், தென்னாப்பிரிக்க அணி 2வது இடத்திற்கு செல்லவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications