8 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி.. குழப்பம்.. சிக்கி தவிக்கும் இந்திய அணி.. வெளியான பகீர் தகவல்
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் யார் எல்லாம் விளையாடுவார்கள் என்ற குழப்பம் நிலவி வருகிறது. 8 வீரர்களுக்கு இடையே இதில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பண்ட், சாகா, பாண்டியா, கே. எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், குல்தீப், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

போட்டி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் யார் எல்லாம் விளையாடுவார்கள் என்ற குழப்பம் நிலவி வருகிறது. அணிக்குள் இருக்கும் பல்வேறு வீரர்களுக்கு இடையே இதில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓப்பனிங் வீரர்கள் தொடங்கி பவுலர்கள் வரை பலருக்கு இடையே கடுமையான போட்டி நிலவ உள்ளது.

யார்
அதன்படி இந்திய அணியின் ஒப்பனர்களில் ரோஹித் சர்மா - கே. எல் ராகுல் இடையே போட்டி நிலவி வருகிறது. ராகுலை மீண்டும் டெஸ்ட் போட்டியில் ஆடும் அணியில் கொண்டு வரலாமா அல்லது ரோஹித் சர்மாவை வைத்தே போட்டியை தொடரலாமா என்று கேள்வி எழுந்துள்ளது.

பவுலர்கள்
இன்னொரு பக்கம் மிடில் ஆர்டரில் மயங்க் போன்ற கூடுதல் பேட்ஸ்மேனை இறக்கலாமா அல்லது 5 பவுலர்கள் உடன் செல்லலாமா என்று குழப்பம் உள்ளது. ஷரத்துல் தாக்கூர் - மயங்க் அகர்வால் இடையே இதற்கான போட்டி நிலவி வருகிறது.

மாற்றம்
இதுபோக இன்னொரு பக்கம் பவுலர்களில் சிராஜுக்கு வாய்ப்பு கொடுக்கலாமா இஷாந்த் சர்மாவிற்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்று கேள்வி எழுந்துள்ளது. வெறும் 4 பவுலர்களை மட்டும் கோலி பயன்படுத்தினால் பும்ரா கண்டிப்பாக ஆடுவார். சிராஜ் - இஷாந்த் சர்மாவின் ஒருவர் வாய்ப்பை இழக்க நேரிடும். ஐந்து பவுலர்கள் ஆடினால் மூன்று பேருக்குமே வாய்ப்பு கிடைக்கும்.

வேறு யார்
இன்னோர் பக்கம் ஸ்பின் பவுலர்களில் ஆட போகும் இரண்டு பேர் யார் என்று குழப்பம் நிலவி வருகிறது. அஸ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வாஷிங்க்டன் சுந்தர் ஆகிய நான்கு பேரில் எந்த இரண்டு பேருக்கு வாய்ப்பு கொடுப்பது என்று குழப்பம் நிலவி வருகிறது. இதனால் இந்திய அணி தேர்வில் கடைசி கட்டத்தில் ஏதாவது மாற்றம் நடக்கலாம் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications