Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிராவிட் - பிசிசிஐ இடையே கருத்து வேறுபாடு? 2 சீனியர்களால் வந்த பிரச்னை.. அணித்தேர்வில் குழப்பம்!

மும்பை: தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

Recommended Video

BCCI vs Dravid இடையே கருத்து வேறுபாடு? அணித்தேர்வில் குழப்பம்| Oneindia Tamil

இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி தொடர்கள் நடைபெறவுள்ளன.

வரும் டிசம்பர் 26ம் தேதி தொடங்கவுள்ள இந்த தொடருகளுக்கான அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்துவிட்ட நிலையில் இந்திய அணியில் குழப்பம் நீடிக்கிறது.

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்

இந்திய அணியை மொத்தமாக 25 பேர் கொண்ட குழுவாக அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு நேற்று கூடியது. இதில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி ஆகியோர் பங்கேற்றனர். நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மனக் கசப்புகள் ஏற்பட்டதால் முடிவுகள் எட்டப்படவில்லை.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

டெஸ்ட் தொடருக்கான அணி தொடர்பாக முதலில் ஆலோசிக்கப்பட்டது. இதில் அஜிங்கியா ரகானே மற்றும் இஷாந்த் சர்மாவை கழட்டிவிட தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் டிராவிட், கோலி ஆகியோர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்பதால் அவர்களுக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என வாதம் செய்துள்ளனர். இதனால் கார சார விவாதம் நடந்துள்ளது.

தள்ளிவைப்பு

தள்ளிவைப்பு

இதனால் டெஸ்ட் அணியின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் நாளை தான் (டிச.9) இது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க ஒருநாள் போட்டிக்கான அணி குறித்து கண்டுக்கொள்ளவே படவில்லை எனத்தெரிகிறது. அதனை முடிவு செய்ய கால அவகாசம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 என்ன காரணம்

என்ன காரணம்

தென்னாப்பிரிக்காவுடனான ஒருநாள் போட்டி தொடர் ஜனவரி 19ம் தேதியன்று தான் தொடங்குகிறது. இதற்கு இன்னும் ஒருமாத காலத்திற்கும் மேல் இருப்பதால், விஜய் ஹசாரா கோப்பையை பார்க்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. இந்த தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்துக்கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Story first published: Wednesday, December 8, 2021, 12:56 [IST]
Other articles published on Dec 8, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+