
புதிய சரித்திரம்
இப்போட்டியில் இந்திய அணி தனது சரித்திர நிகழ்வுக்காக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏனென்றால் இந்திய அணி விளையாடும் 1000வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதுவாகும். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக பார்க்கப்படும் அகமதாபாத் "மோதிரா மைதானத்தில்" இந்த சரித்திர நிகழ்வு நடைபெறவுள்ளது.

முதல் போட்டி விவரம்
கிரிக்கெட் வரலாற்றில் 1000 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் நாடு என்ற பெருமையை இந்திய அணி பெறவுள்ளது. கடந்த 1974-ம் ஆண்டு இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் அந்த அணிக்கு எதிராக இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது. அஜித் வடேகர் தலைமையில் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வருத்தமாகவே தனது பயணத்தை தொடங்கியது.

வெற்றி சதவீதம்
எனினும் அன்றில் இருந்து 48 ஆண்டுகளில் இந்திய அணி 999 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 518 வெற்றிகளையும் 431 தோல்விகளையும் பெற்று வெற்றிகரமான அணியாக விளங்குகிறது. 9 போட்டிகள் டையில் முடிந்த நிலையில் 41 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணி அதிக போட்டிகளில் விளையாடியுள்ளன. ஆஸ்திரேலியா : 958 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 936 போட்டிகளிலும் விளையாடியுள்ளன.

தோனியின் பெருமை
இந்தியா ஒவ்வொரு முறையும் மைல்கல்லை எட்டியபோது கேப்டன்சி செய்தவர்களின் பட்டியல்
100வது போட்டி : கபில் தேவ்
200வது போட்டி : முகமது அசாருதீன்
300வது போட்டி : சச்சின் டெண்டுல்கர்
400 வது போட்டி : முகமது அசாருதீன்
500வது போட்டி : சவுரவ் கங்குலி
600வது போட்டி : விரேந்தர் சேவாக்
700வது போட்டி : எம்எஸ் தோனி
800வது போட்டி : எம்எஸ் தோனி
900வது போட்டி : எம்எஸ் தோனி
1000வது போட்டி : ரோஹித் சர்மா*


Click it and Unblock the Notifications