Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இத செஞ்சே ஆகனும்; இல்லைனா.. ரோகித் சர்மாவுக்கு வந்த கண்டம்.. ஓவல் பிட்ச்-ல் ஏற்பட்டுள்ள மாற்றம்!

அடிலெய்ட்: இங்கிலாந்து அணியுடனான போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஒரு விஷயத்தை செய்தே தீர வேண்டும்.

டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதிப்போட்டியில் இந்த இரண்டு அணிகளும் இன்று மோதுகின்றன. இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

ஒருபுறம் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் சென்றுவிட்ட சூழலில், இன்று இந்திய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் சிறப்பாக இருக்கும். எனவே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

அரையிறுதி ஆட்டம்

அரையிறுதி ஆட்டம்

இந்திய அணியை பொறுத்தவரையில் லீக் சுற்றில் தரமான ஆட்டங்களை வெளிப்படுத்திவிட்டு வந்துள்ளன. 5 போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுடன் மட்டுமே தோல்வியை தழுவியது. எனினும் இன்று முக்கியப்போட்டி என்பதால் ப்ளேயிங் 11ல் ரிஷப் பண்ட் மற்றும் சாஹல் ஆகியோரை கொண்டு வந்து தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித்-க்கு சிக்கல்

ரோகித்-க்கு சிக்கல்

இந்நிலையில் இப்போட்டியில் ரோகித்-க்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. அதாவது போட்டி நடைபெறும் ஓவலில் மைதானத்தில் லீக் சுற்றுக்கு பயன்படுத்திய அதே பிட்ச் தான் (பழைய பிட்ச்) பயன்படுத்தப்படுகிறது. நிறைய போட்டிகள் நடந்திருப்பதால், பிட்ச் அடிவாங்கி மெதுவாக இருக்கும். அதுவும் நேரம் போக போக இன்னும் மெதுவாக ஆகும் என்பதால் பேட்ஸ்மேன்கள் சிரமப்படுவார்கள்.

என்ன செய்யனும்?

என்ன செய்யனும்?

எனவே இங்கு டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும். மெதுவான இந்த களத்தில் 150 -160 ரன்கள் அடித்தாலே சவாலான இலக்கு தான். ஆனால் இங்கிலாந்து அணியில் 8வது விக்கெட் வரை அதிரடி பேட்டர்கள் உள்ளனர். கடைசி நேரத்தில் கூட வெற்றி பெறும். முதலில் பேட்டிங் செய்தால் எப்படியாவது 180 ரன்கள் வரை அடித்துவிட வேண்டும்.

வெற்றிக்கு என்ன வழி?

வெற்றிக்கு என்ன வழி?

இதற்கு பவர் ப்ளேவில் இருந்தே ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி அடித்தளம் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது. ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். இவர்களுடன் சேர்த்து சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா, கோலி என நல்ல பலமான வரிசை இருப்பதால் பேட்டிங் தான் இன்றைய போட்டியின் முடிவை தீர்மானிக்கப்போகிறது.

Story first published: Thursday, November 10, 2022, 11:06 [IST]
Other articles published on Nov 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+