Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் திட்டத்தில் 3 மாற்றம்.. 3வது ஒருநாள் போட்டியில் செய்தே தீர வேண்டும்.. யோசிப்பாரா ரோகித்?

மேன்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்காக இந்திய அணி திட்டத்தில் 3 மாற்றங்கள் கண்டிப்பாக தேவை.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இரு அணிகளும் 1- 1 என சமநிலையில் உள்ள சூழலில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.

3 மாற்றங்கள்

3 மாற்றங்கள்

முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஏமாற்றியது. எனவே 3வது போட்டியில் இந்திய அணி தவறுகளை சரி செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக தனது திட்டத்தில் 3 மாற்றங்களை செய்யதால் மட்டுமே வெற்றி தேடி வரும்.

ஷர்துல் தேவை

ஷர்துல் தேவை

கடந்த 2 போட்டிகளிலும் பிரஷித் கிருஷ்ணா தான் 3வது வேகப்பந்துவீச்சாளராக இருந்து வருகிறார். ஆனால் இதுவரை 2 விக்கெட்கள் மட்டுமே எடுத்துள்ளார். ரன்களும் அதிகப்படியாக போயுள்ளது. எனவே அடுத்த போட்டியில் பிரஷித்திற்கு மாற்றாக ஷர்துல் தாக்கூர் கொண்டு வரப்பட வேண்டும். இங்கிலாந்து களத்தில் சிறப்பான ரெக்கார்ட் வைத்துள்ளவர் ஷர்துல். இதே போல 8வது இடத்தில் பேட்டிங்கிலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

பாண்ட்யாவின் பவுலிங்

பாண்ட்யாவின் பவுலிங்

இந்திய அணியின் பவுலிங் திட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா முக்கிய பங்கு வகிக்கிறார். ஆனால் ஓவர்கள் குறைவாகவே கிடைக்கிறது. கடந்த 2 போட்டிகளிலும் 10 ஓவர்களை மட்டுமே வீசியுள்ள பாண்ட்யா, 2 முக்கிய விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். ரன்களும் மிகக்குறைவாக சென்றுள்ளது. எனவே அடுத்த போட்டியில் அதிகப்படியான ஓவர்கள் பாண்ட்யாவுக்கு தரப்பட வேண்டும்.

சூர்யகுமாரின் இடம்

சூர்யகுமாரின் இடம்

இந்திய பேட்டிங் ஆர்டரில் தற்போதைக்கு முழுமையான ஃபார்மில் இருப்பவர் சூர்யகுமார் யாதவ். அவர் தனது கடைசி 2 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 27 ரன்களை அடித்துள்ளார். 4வது இடம் தான் இவருக்கு ஏற்ற ஒன்றாகும். ஆனால் கடந்த போட்டியில் இவருக்கு முன்பாக ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார். இதனால் இருவரின் இயல்பான ஆட்டமும் சொதப்பியது.

Story first published: Saturday, July 16, 2022, 12:02 [IST]
Other articles published on Jul 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+