Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சி போட்டியிலும் இந்தியா தரமான சம்பவம்.. விராட் கோலி மட்டும் மிஸ்ஸிங்.. ஸ்கோர் எவ்வளவு தெரியுமா?

பெர்த்: டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதல் பயிற்சி போட்டியிலேயே இந்திய அணி கெத்து காட்டியுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி கடந்த 6ம் தேதியன்றே ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைந்தது.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் பயிற்சி போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட போதும், அதற்கு முன்னதாக உள்நாட்டு அணிகளுடனும் 2 பயிற்சி போட்டிகள் நடத்தப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணியில் பெரும்பாலான வீரர்களுக்கு ஆஸ்திரேலிய களத்தில் விளையாடிய அனுபவம் இல்லை. எனவே அதனை புரிந்துக்கொள்வதற்காக பயிற்சி போட்டிகள் ஏற்படுத்தப்பட்டன.

முதல் பயிற்சி போட்டி

முதல் பயிற்சி போட்டி

இந்நிலையில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணியுடனான முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி இன்று மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் கோலி, கே.எல்.ராகுல் மட்டும் அஸ்வின் உள்ளிட்டோருக்கு ஓய்வு தரப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங் வீரர்கள் பெரியளவில் சோபிக்கவில்லை.

பேட்டிங் ஏமாற்றம்

பேட்டிங் ஏமாற்றம்

தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 3 ரன்களுக்கும், ரிஷப் பண்ட் 9 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய தீபக் ஹூடா 22 ரன்களுக்கு நடையை கட்டினார். ஆஸ்திரேலிய களத்தில் இந்தியா தடுமாறுகிறது என ரசிகர்கள் கவலையடைந்த போது சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை நட்சத்திரமாக அமைந்தார்.

அதிக ஸ்கோர்

அதிக ஸ்கோர்

முதல் பந்து முதலே அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். ஆஸ்திரேலிய களம் புதிது என்ற போதும், சூர்யகுமார் அசத்தினார். இவருடன் உறுதுணையாக நின்ற ஹர்திக் பாண்ட்யா 20 பந்துகளில் 29 ரன்களை விளாசினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 158 ரன்களை குவித்தது.

Story first published: Monday, October 10, 2022, 14:21 [IST]
Other articles published on Oct 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+