அதிரடி கம்பேக் தரும் ஷிகர் தவான்.. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. கலக்கல் படை இதோ!!
மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட், 3 டி20 போட்டி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி மோதவுள்ளது.
டெஸ்ட் போட்டி இன்று தொடங்கவுள்ள சூழலில் ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

50 ஓவர் தொடர்
இரு அணிகளுக்கும் இடையேயான 50 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் ஜூலை 12ம் தேதி முதல் ஜூலை 17ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையில் 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி வீரர்கள் அனைவருமே இதில் பங்குபெற்றுள்ளனர்.

சீனியர் வீரர் கம்பேக்
ஓப்பனிங்கை பொறுத்தவரையில் ரோகித் சர்மாவுடன் சீனியர் வீரரான ஷிகர் தவான் மீண்டும் கைக்கோர்க்கவுள்ளார். தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட அவருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதே போல சூர்யகுமார் யாதவ், யுவேந்திர சாஹல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் இந்திய ஒருநாள் அணிக்கு கம்பேக் தரவுள்ளனர்.

இந்திய படை
ரோகித் சர்மா, ஷிகர் தவான், இஷான் கிஷான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், யுவேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், பும்ரா, பிரஷித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி

அஸ்வின் ஏமாற்றம்
டி20 உலகக்கோப்பை தொடர் முதல் மீண்டும் கம்பேக் கொடுத்திருந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தந்த போதும், சீனியருக்கு வாய்ப்பு தராதது ஏன் என ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications