For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒருநாள் தொடருக்கான அணியை அறிவிச்சுருக்கு பிசிசிஐ... புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துருக்காங்க!

டெல்லி : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ளது. டி20 தொடருக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது.

Recommended Video

IND VS ENG: Natarajan, Suryakumar get call to India ODI squad | OneIndia Tamil

அடுத்ததாக 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் பூனாவில் துவங்கி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இதற்கான அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அணி குறித்த விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

டி20 தொடரில் சமன்

டி20 தொடரில் சமன்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 3க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து தற்போது 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர் நடைபெற்ற வருகிறது. இதில் இரு அணிகளும் 2க்கு 2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

வெற்றியை தீர்மானிக்கும் போட்டி

வெற்றியை தீர்மானிக்கும் போட்டி

நாளை நடைபெறவுள்ள 5வது டி20 போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை கைகொள்ளும். இதையடுத்து நாளைய போட்டி தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும் போட்டியாக அமையவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி கொள்ள இரு அணிகளும் தீவிரமாக உள்ளது.

அணி அறிவிப்பு

அணி அறிவிப்பு

இதையடுத்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான அணியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் மட்டுமின்றி, சூர்யகுமார் யாதவ், க்ருணால் பாண்டியா, டி நடராஜன், சிராஜ் உள்ளிட்ட புதியவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

புதியவர்களுக்கு வாய்ப்பு

புதியவர்களுக்கு வாய்ப்பு

கடந்த டெஸ்ட் தொடரை இந்தியா சிறப்பான வகையில் வெற்றி கொண்டது. இதையடுத்து இந்த ஆண்டின் அக்டோபர், நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளதையடுத்து தற்போதைய டி20 தொடரில், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒருநாள் போட்டித் தொடரிலும் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, March 19, 2021, 11:52 [IST]
Other articles published on Mar 19, 2021
English summary
Team India fors ODI series against England announced
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+