கோலி செய்த காரியம்.. இந்த வீடியோவை பார்த்தா கண்டிப்பா தோனியை மிஸ் பண்ணுவீங்க.. வைரல்!
சென்னை: சென்னையில் இந்திய அணி பயிற்சி செய்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கோலி செய்த காரியம் தோனி ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையே நாளை நடக்க உள்ள கிரிக்கெட் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடர் மிகப்பெரிய தொடராக நடக்க உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்தியா வென்றுள்ளது.
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் இந்தியா வெல்லும் எண்ணத்தில் இந்திய அணி உள்ளது.இரண்டு அணிகளும் மோதும் இந்த தொடர் ஆஸ்திரேலிய தொடரை போல விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை
இந்திய வீரர்கள் சென்னையில் இதற்காக கடந்த இரண்டு நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இரவு பகலாக விடாமல் இவர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். டெஸ்ட் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்று உறுதியாக இந்திய வீரர்கள் உள்ளனர். இதனால் பயிற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

பயிற்சி
சென்னையில் இந்திய அணி பயிற்சி செய்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கோலி செய்த காரியம் தோனி ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கேப்டன் கோலி இந்த பயிற்சி வீடியோவில் தோனி போல ஆட முயன்று இருக்கிறார்.
தோனி
தோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டை அடிக்க முயன்று உள்ளார். தோனி எப்படி ஆடுவாரோ அதேபோல் கோலியும் ஆடி உள்ளார் . இந்த வீடியோதான் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. தோனி ரசிகர்கள் இதை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

ஷேர் செய்கிறார்கள்
தோனி இந்திய அணியில் இல்லை. ஆனாலும் அவரின் பாதிப்பு இன்னும் இந்திய அணியில் இருக்கிறது. தோனி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பது இந்த வீடியோ மூலம் தெரிகிறது.இந்திய வீரர்கள் பயிற்சியில் தோனியை மிஸ் செய்வது அப்பட்டமாக தெரிகிறது என்று குறிப்பிட்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications