Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2016 முதல் தற்போது வரை.. டெஸ்ட் கிரிக்கெட்டை ஆட்டிப்படைக்கும் இந்திய அணி.. பல வரலாற்று சாதனை இதோ!!

பெங்களூரு: இலங்கை தொடரை வென்றது மூலம் இந்திய அணி பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்தது.

முதல் டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்களுக்கு வென்று அசத்திய இந்திய அணி 2வது டெஸ்டையும் கைப்பற்றியுள்ளது.

எப்படி வென்றது

எப்படி வென்றது

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் எடுக்க, இலங்கை 109 ரன்களுக்கெல்லாம் சுருண்டது. இதனால் 143 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 303 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இதன் பின்னர் 447 என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என கைப்பற்றியது.

வரலாற்று சாதனை

வரலாற்று சாதனை

இந்நிலையில் இதன் மூலம் வரலாற்று சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அதாவது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்ற அணிகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக பெறும் 15வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் எப்படிபட்ட அணியாலும், இந்திய அணியை தகர்க்க முடியாத கோட்டையாக இந்திய மண் பெயர் பெற்றுள்ளது.

 இந்திய அணி தான் ராஜா

இந்திய அணி தான் ராஜா

இதுமட்டுமல்லாமல் கடந்த 2016ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணிகளின் பட்டியலிலும் இந்தியா ராஜாவாக திகழ்கிறது. கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்திய அணி 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 41 வெற்றிகளும், 16 தோல்விகளும், 10 டிராவும் ஆயுள்ளன. 2வது இடத்தில் இங்கிலாந்து அணி 33 வெற்றிகளுடன் உள்ளது.

இலங்கையின் கனவு

இலங்கையின் கனவு

இது ஒருபுறம் இருக்க இலங்கை அணியின் ஏக்கம் கனவாகவே உள்ளது. வரலாற்றில் இதுவரை இந்திய மண்ணில் இலங்கை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வென்றது கிடையாது. இந்த முறை அந்த வரலாற்றை மாற்றி அமைப்போம் என இலங்கை கேப்டன் கருணரத்னே நம்பிக்கையுடன் கூறினார். ஆனால் அதற்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியது.

Story first published: Monday, March 14, 2022, 18:52 [IST]
Other articles published on Mar 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+