Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் 15 மணி நேரம்தான்.. குழப்பத்தில் 3 வீரர்கள்.. இந்திய பிளேயிங் 11ல் குழப்பம்.. பரபர பின்னணி!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை காலை நடக்க உள்ள நிலையில் இந்திய அணி இன்னும் தனது பிளேயிங் 11 வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் குழம்பி வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் நாளை நடக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை காலை நடக்க உள்ள நிலையில் இந்திய அணி இன்னும் தனது பிளேயிங் 11 வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் குழம்பி வருகிறது. நாளை நடக்கும் போட்டியில் கோலிக்கு மாற்று வீரர் கே. எல் ராகுல் என்பது உறுதியாகிவிட்டது. இதில் குழப்பம் இல்லை.

மூன்று வீரர்கள்

மூன்று வீரர்கள்

ஆனால் வேறு மூன்று வீரர்களை தேர்வு செய்வதில் குழப்பம் உள்ளது. இந்திய அணியில் ஓப்பனிங் வீரர் பிரித்வி ஷாவா அல்லது சுப்மான் கில்லா என்பதில் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. இரண்டு பேருமே இன்று தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார்கள். இதில் பிரித்வி ஷாவிற்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாமா என்று பிசிசிஐ ஆலோசனை செய்து வருகிறது.

 ஜடேஜா

ஜடேஜா

அதேபோல் இந்திய அணியில் ஹனுமா விஹாருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாமா அல்லது மீண்டும் பார்ம் பெற்று திரும்பி இருக்கும் ஜடேஜாவிற்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்று பிசிசிஐ குழம்பி உள்ளது. ஜடேஜா நன்றாக பவுலிங் செய்வார் என்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

கீப்பர்

கீப்பர்

அதேபோல் இந்திய அணியில் கீப்பர் விர்த்திமான் சாகாவிற்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கலாமா என்ற குழப்பத்திலும் பிசிசிஐ உள்ளது. பண்டிற்கு வாய்ப்பு கொடுக்கும் திட்டமும் உள்ளது. இந்த 3 இடங்களில் யாரை இறக்கலாம், யாரை நாளை உட்கார வைக்கலாம் என்று தெரியாமல் பிசிசிஐ கடும் குழப்பத்தில் உள்ளது. இன்னும் போட்டி தொடங்க 15 மணி நேரமே உள்ள நிலையில் 11 வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது.

Story first published: Thursday, December 24, 2020, 17:50 [IST]
Other articles published on Dec 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+