Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இத எதிர்பார்க்கவே இல்லையே.. கே.எல்.ராகுலுடன் சேர்ந்து மற்றொருவரும் நீக்கம்.. 3வது டெஸ்டில் ட்விஸ்ட்

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் 2 முக்கிய மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. தொடக்கத்திலேயே நல்ல விஷயமும் நடந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பையில் 2 - 0 என இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது. இதனையடுத்து 3வது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு விஷயமும், எதிர்பார்க்காத ஒரு மாற்றத்தையும் செய்துள்ளனர்.

சரியான முடிவா?

சரியான முடிவா?

போட்டி நடைபெறும் இந்தூர் பிட்ச்சானது முந்தைய போட்டிகளை போல சுழற்பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்காது. சிகப்பு மண் இருப்பதால் முதல் 2 நாட்களுக்கு நல்ல வேகமும், பவுன்ஸும் இருக்கும். எனவே 2 நாட்களுக்கு வேகப்பந்துவீச்சாளர்களும், அடுத்த 3 நாட்களுக்கு சுழற்பந்துவீச்சாளர்களும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனினும் இதற்காக கூடுதல் வேகப்பந்துவீச்சாளரை கொண்டு வராமல் 3 ஸ்பின்னர்களுடனேயே ரோகித் துணிந்து களமிறங்குகிறார்.

கே.எல்.ராகுல் இல்லை

கே.எல்.ராகுல் இல்லை

அதாவது இந்திய அணியின் ஓப்பனிங்கில் கே.எல்.ராகுல் தொடர்ந்து சொதப்புவதால் மாற்றியே தீர வேண்டும் எனக்கோரிக்கை எழுந்து வந்தது. அதற்கேற்றார் போல துணைக்கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எனவே அனைவரும் எதிர்பார்த்ததை போலவே அவர் நீக்கப்பட்டு சுப்மன் கில் உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் முகமது ஷமி நீக்கப்பட்டிருக்கிறது.

முகமது ஷமிக்கு ஓய்வு

முகமது ஷமிக்கு ஓய்வு

சீனியர் வீரரான முகமது ஷமி தொடர்ச்சியாக 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள சூழலில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதனையடுத்து அவரின் இடத்தில் உமேஷ் யாதவ் கொண்டு வரப்பட்டுள்ளார். பவுன்ஸ் அதிகம் இருப்பதால் உமேஷால் சிறப்பாக தாக்கத்தை ஏற்படுத்த முடியும். நீண்ட நாட்கள் கழித்து உமேஷ் அணிக்குள் வருவதால் முகமது சிராஜுடன் சேர்ந்து எப்படி செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ரோகித் சர்மா, சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பரத், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்

Story first published: Wednesday, March 1, 2023, 9:35 [IST]
Other articles published on Mar 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+