Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நியூசிலாந்துக்கு பறக்கும் இந்திய அணி.. ரசிகர்களுக்கு கொடுத்த திடீர் சர்ஃபரைஸ்.. எப்போது தெரியுமா??

சென்னை: நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி தற்போது அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணங்களில் பிசியாக வலம் வருகிறது.

இந்த தொடர்களை முடித்துக்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரில் மோதவுள்ளதாக கூறப்பட்டது.

நியூசிலாந்து சுற்றுப்பயணம்

நியூசிலாந்து சுற்றுப்பயணம்

இந்நிலையில் இந்திய அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரிலும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட நியூசிலாந்தின் உள்நாட்டு போட்டிக்கான அட்டவணையில் இது உறுதியாகியுள்ளது.

அட்டவணையில் சிக்கல்

அட்டவணையில் சிக்கல்

இந்திய அணி அடுத்ததாக வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கிறது. அதன்பின்னர் ஆசியக்கோப்பை தொடர், டி20 உலகக்கோப்பை தொடர் என அடுத்தடுத்து தொடர்களில் விளையாடவுள்ளது.

 போட்டிகள் எப்போது

போட்டிகள் எப்போது

எனவே நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த அடுத்த 3 நாட்களில் உறுதி செய்துள்ளனர். அதாவது நவம்பர் 18ம் தேதி தொடங்கி நவம்பர் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் இதே போன்று நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு அட்டவணை

முழு அட்டவணை

  • நவம்பர் 18 - முத டி20 போட்டி
  • நவம்பர் 20 - 2வது டி20 போட்டி
  • நவம்பர் 22 - 3வது டி20 போட்டி
  • நவம்பர் 25 - முதல் ஒருநாள் போட்டி
  • நவம்பர் 27 - 2வது ஒருநாள் போட்டி
  • நவம்பர் 30 - 3வது ஒருநாள் போட்டி
Story first published: Tuesday, June 28, 2022, 12:54 [IST]
Other articles published on Jun 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+