Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இனி அதுதான் ஒரே வழி.. ரிஷப் பண்ட்-ன் ப்ளானை கையில் எடுத்த டிராவிட்.. ஆஸி, டெஸ்டில் புதிய முயற்சி!

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் அனைவரும் ரிஷப் பண்ட்-ன் திட்டத்தை பின்பற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் டிராவிட்டே இதனை தான் பரிந்துரைத்துள்ளாராம்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நாக்பூரில் வரும் பிப்ரவரி 9ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 3 முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரிலும் இந்திய அணி தான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்பது சற்று சிரமமாக தான் இருக்கும் எனத்தெரிகிறது.

ஆஸி, டெஸ்ட் தொடர்

ஆஸி, டெஸ்ட் தொடர்

ஏனென்றால் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக மாஸ்டர் ப்ளானை தொடங்கிவிட்டனர். அதாவது சிட்னியில் உள்ள மைதானத்தில் ஏகபோகத்திற்கு ஸ்பின் ஆகும் வகையில் ஒரு பிட்ச்-ஐ உருவாக்கி அதில் பயிற்சி பெற்றனர். இதே போல பெங்களூருவிலும் முழுக்க முழுக்க ஸ்பின்னுக்கு உதவக்கூடிய "தார் ரோடு" போன்ற பிட்ச்-ல் பேட்டிங் பயிற்சியை செய்துள்ளனர். இதற்காக இந்தியாவை சேர்ந்த பவுலர்களையே பயன்படுத்தினர்.

ரிஷப் பண்ட்-ன் வழி

ரிஷப் பண்ட்-ன் வழி

இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சமாளிக்க ரிஷப் பண்ட்-ன் வழியில் தான் இந்திய வீரர்கள் செல்லவுள்ளனர். ஆஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளர்களும் பெரிய அச்சுறுத்தலை கொடுப்பார்கள் என்பதால் அவர்களை சமாளிக்க டிராவிட் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் ஆகிய 4 பேரும் தடுப்பாட்டம் செய்ய வேண்டாம், அதிரடியாக ரன்களை சேர்த்துக்கொண்டே இருக்குமாறு கூறியுள்ளார்.

ஸ்பெஷல் பயிற்சி

ஸ்பெஷல் பயிற்சி

இதுமட்டுமல்லாமல் ஸ்வீப் ஷாட்டை விளையாடுவதற்கு ஸ்பெஷல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சூழலுக்கு சாதகமான இந்திய களங்களில் ஸ்வீப் ஷாட் மூலம் அதிக ரன்களை சேர்க்கலாம். எப்போதுமே ரிஷப் பண்ட் களத்தை பற்றி யோசிக்காமல் ரன்னை குவித்துக்கொண்டே இருந்ததால் தான் சிறப்பாக இருக்கிறார். கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரிஷப் பண்ட் இதுபோன்ற முறையில் தான் அதிவேகமாக ரன் சேர்த்தார்.

 சூர்யகுமாரின் பணி

சூர்யகுமாரின் பணி

எனவே டாப் ஆர்டரில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படும் விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சுப்மன் கில் ஆகிய 4 பேருக்கும் நீண்ட நேரம் ஸ்வீப் ஷாட் பயிற்சி தந்துள்ளனர். சூர்யகுமார் யாதவ் இயற்கையாகவே ஸ்வீப் ஆடுவதில் வல்லவர். எனவே பண்ட்-ன் பணியை முழுவதுமாக சூர்யகுமாரிடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, February 7, 2023, 13:54 [IST]
Other articles published on Feb 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+