
காத்திருக்கும் சாதனை
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் இந்திய அணி பிரமாண்ட சாதனை படைக்கும். 2 வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றி இந்திய அணி, 3வது போட்டியில் வெற்றி பெற்றால் வைட் வாஷ் செய்யும். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணியை இந்தியா வைட் வாஷ் செய்த பெருமை பெறும்.

39 ஆண்டு பொறுமை
இந்திய அணி கடந்த 1983ம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதி வருகிறது. கடந்த 39 ஆண்டுகளில் இந்திய மண்ணில் வைட் வாஷ் செய்திருந்தாலும், ஒரு முறை கூட வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்தியா வைட் வாஷ் செய்ததில்லை. முதல் முறையாக அந்த பெருமையை ஷிகர் தவான் பெற்றுக்கொடுக்கலாம்.
Recommended Video

4வது இந்திய கேப்டன்
அப்படி ஒருவேளை நடந்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் 13வது வைட் வாஷாக இது இருக்கும். இதுமட்டுமல்லாமல் அயல்நாட்டில் செய்யும் 5வது வைட் வாஷாக இருக்கும். இதற்கு முன்பாக ஜிம்பாவே மண்ணில் விராட் கோலி (2013), ரகானே (2015), தோனி (2016) வெற்றிகளும், இலங்கையில் விராட் கோலி (2017) தலைமையில் ஒரு முறையும் இந்தியா அனைத்து போட்டிகளையும் வென்றுள்ளது.

ஒரே ஆண்டில் 2 வைட் வாஷ்
இதோடு சாதனை பட்டியல் முடியவில்லை. நடப்பாண்டில் இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சொந்த மண்ணில் வைத்து இந்தியா வைட் வாஷ் செய்திருந்தது. தற்போது அவர்களது மண்ணில் செய்கிறது. இதன் மூலம் ஒரே வருடத்தில் ஒரே அணிக்கு எதிராக 2 ODI வைட் வாஷ் செய்த 3வது அணியாக இந்தியா இடம் பிடிக்கும். இதற்கு முன்பாக வங்கதேசத்திற்கு எதிராக ஜிம்பாவே அணியும், கென்யாவுக்கு எதிராக வங்கதேசமும் செய்திருந்தது.


Click it and Unblock the Notifications











