Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னது ரஹானே உட்பட மூத்த வீரர்கள் நீக்கமா?.. கோபத்தில் கோலி எடுத்த முடிவு..இந்திய அணியில் 3 மாற்றம்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மூன்று முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறுகிறார்கள்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். சென்னையில் இதற்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

முதல் டெஸ்டில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று இந்திய வீரர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.

சென்னை

சென்னை

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மூன்று முக்கியமான மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறுகிறார்கள். அதன்படி இந்திய அணியில் கண்டிப்பாக ஸ்பின் பவுலர் நதீம் மாற்றப்படுவார். இவர் கடந்த போட்டியில் சரியாக பவுலிங் செய்யவில்லை.

யார்

யார்

நதீமிற்கு பதிலாக அணிக்குள் குல்தீப் யாதவ் வருவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அக்சர் பட்டேல் காயத்தில் இருந்து மீண்டு வந்து நன்றாக இருக்கிறார். இதனால் நதீமிற்கு பதிலாக அக்சர் பட்டேல்தான் சேர்க்கப்படுவார். இவரிடம் நல்ல பேட்டிங்கும் இருக்கிறது என்கிறார்கள்.

ஓப்பனிங்

ஓப்பனிங்

அதேபோல் ஓப்பனிங் வீரர் ரோஹித் சர்மா சரியாக ஆடுவது இல்லை. ஆஸ்திரேலிய தொடரிலும் சரி, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலும் இவர் சரியாக ஆடவில்லை. இதனால் இவரை நீக்கிவிட்டு இந்திய அணியில் மயங்க் அகர்வால் மீண்டும் ஓப்பனிங் இறக்கப்படலாம் என்கிறார்கள்.

 டெஸ்ட் ஓப்பனிங்

டெஸ்ட் ஓப்பனிங்

டெஸ்ட் போட்டிகளில் இந்திய மண்ணில் மயங்க் அகர்வால் நன்றாக ஆடி வருவதால் இவர் ஓப்பனிங் இறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது போக ரஹானேவிற்கு ஓய்வு கொடுக்கப்படும் என்றும் கூறுகிறார்கள். ஒரு பேட்ஸ்மேனாக இவர் நல்ல பார்மில் இல்லை. இதனால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படும்.

10 போட்டிகள்

10 போட்டிகள்

கடந்த 10 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ரஹானே நன்றாக ஆடி இருக்கிறார். இதனால் அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு ராகுலை எடுக்க கோலி திட்டமிட்டு உள்ளார். கே. எல் ராகுல் சென்னை பிட்சில் நன்றாக ஆட கூடிய வீரர் என்பதால் இவரை அணிக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது .

Story first published: Thursday, February 11, 2021, 16:03 [IST]
Other articles published on Feb 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+