அவரால் எழுந்து கூட நிற்க முடியவில்லை.. மூத்த வீரரை வைத்து இந்தியா எடுத்த ரிஸ்க்.. கோபத்தில் பிசிசிஐ
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா தனது உடலில் காயத்தோடு ஆடிய சம்பவம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவும், டி 20 தொடரில் இந்தியாவும் வென்ற நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் தீவிரமாக நடந்து வருகிறது.
டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வெல்ல மூன்றாவது டெஸ்ட் டிரா ஆனது. இந்த நிலையில் நான்காவது டெஸ்டில் வெல்லும் அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை கைப்பற்றும்.

பும்ரா
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா தனது உடலில் காயத்தோடு ஆடிய சம்பவம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்யும் போதே பும்ராவிற்கு காயம் இருப்பது உறுதியாகிவிட்டது. இவருக்கு வயிற்றில் காயம் இருந்தது.

காயம்
ஆனால் இதே காயத்தோடு பும்ரா அன்று பவுலிங் செய்துள்ளார். அதோடு பீல்டிங்கும் செய்துள்ளார். இவருக்கு வயிற்றில் இருந்த காயம் காரணமாக சரியாக இவரால் குனிய முடியவில்லை. மேலும் உட்காரவும் முடியவில்லை.

போட்டிக்கு பின்
போட்டிக்கு பின் இந்தியா பேட்டிங் செய்தது. அப்போது பும்ரா படுத்தப்படுக்கையாக கிடந்தார். அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் அவரை தொடர்ந்து ஆட வைக்க இந்திய பயிற்சியாளர் குழு முடிவு செய்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா காயத்தோடு தொடர்ந்து பவுலிங் செய்தார்.

அனுமதி
பயிற்சியாளர் குழுவின் அனுமதியோடுதான் பும்ரா இப்படி பவுலிங் செய்துள்ளார். இந்த நிலையில் பும்ரா போன்ற மூத்த வீரரை வைத்து இந்திய அணி ரிஸ்க் ஏ எடுத்ததை பிசிசிஐ விரும்பவில்லை என்கிறார்கள். இதனால் பயிற்சியாளர் குழு மீது பிசிசிஐ கோபத்தில் உள்ளது.

கோபம்
காயம் அடைந்த வீரரை வைத்து பயிற்சியாளர் குழு ரிஸ்க் எடுத்து இருக்க கூடாது. அவருக்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும். அவரை தொடர்ந்து ஆட அனுமதித்து பிசிசிஐ தவறு செய்துவிட்டது. இதை ஏற்க முடியாது, என்று பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் பயிற்சியாளர் குழுவிடம் கூறியதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications