அடுத்தடுத்து விக்கெட்.. இந்திய அணியின் டாப் ஆர்டரை சரித்த ஆஸி. பவுலர்கள்.. திணறும் பேட்ஸ்மேன்கள்!
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்சில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து சொதப்பி உள்ளனர்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வெல்ல மூன்றாவது டெஸ்ட் டிரா ஆனது.
இந்த நிலையில் நான்காவது டெஸ்டில் வெல்லும் அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வீரர்கள்
இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டிக்கு முன்பாக பல இந்திய வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இதனால் மீதம் இருக்கும் வீரர்களை வைத்து புதிய அணியை இந்திய அணி உருவாக்கி உள்ளது. இந்திய அணியில் முழுக்க முழுக்க புதிய பவுலர்கள் இருந்தாலும் கூட பலரும் சிறப்பாக பவுலிங் செய்தனர்.

முதல் இன்னிக்ங்ஸ்
இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் இளம் பவுலிங் படையில் நடராஜன் 3 விக்கெட், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட், ஷரத்துல் தாக்கூர் 3 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட் எடுத்தனர்.

விக்கெட்
இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது போல அணியின் பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லை. தொடக்கத்தில் ரோஹித் சர்மா அதிரடியாக 44 ரன்கள் எடுத்தார். அதன்பின் வரிசையாக இந்திய அணி வீரர்கள் எல்லோரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்
புஜேரா 25, ரஹானே 37 ரன்களுக்கு அவுட் ஆனார்கள். அதன்பின் அதிரடியாக ஆடிய மயங்க் அகர்வால் 38 ரன்களுக்கு அவுட் ஆனார்கள். இதனால் வரிசையாக இந்திய அணி இன்று அடுத்தடுத்து 3 விக்கெட்டை இழந்தது. இதனால் இந்திய அணி தற்போது 5 விக்கெட்டிற்கு 171 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.


Click it and Unblock the Notifications