Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துடன் தோல்வி: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை திட்டி தீர்க்கும் முன்னாள் ஆட்டக்காரர்கள்

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா அடைந்த மோசமான டெஸ்ட் தோல்விக்காக முன்னாள் வீரர்கள், இந்திய அணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. 2வது போட்டியில் லாட்சில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆனால் 3 மற்றும் 4காவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி எதிரணியிடம் ஒட்டுமொத்தமாக சராணகதி அடைந்து தோற்றது.

மொயீன் அலியை சமாளிக்கலை

மொயீன் அலியை சமாளிக்கலை

இதுகுறித்து முன்னாள் விக்கெட் கீப்பர் விஜய் தாகியா கூறுகையில் "3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து பந்து வீச்சாளர் மெயீன் அலிக்கு எதிராக தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டதால் இந்திய அணி வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். எனவே நான்காவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு எதிராக அடித்து ஆட முயன்றனர். ஆனால் அப்போதும் அவுட்தான் ஆனார்கள்.

கோஹ்லிக்கு நெருக்கடி

கோஹ்லிக்கு நெருக்கடி

விராட் கோஹ்லி தன்மீது மிகுந்த அழுத்தத்தை கொடுத்து வருகிறார். வெளியில் இருந்து வரும் அழுத்தத்தை தாண்டி அவருக்கு அவரே நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார். இந்த போட்டித்தொடரில் ஒரே மாதிரியான வகையில் விராட் கோஹ்லி அவுட் ஆகிவருகிறார். சிறந்த பேட்ஸ்மேனான அவர், டெக்னிக்கல் ரீதியில் தோல்வியடைந்து அவுட் ஆவதாக நான் நினைக்கவில்லை. அவரது மனது கலக்கத்தில் இருப்பதால்தான் இதுபோன்று அவுட் ஆகிறார்.

சச்சின், டிராவிட்டை பாருங்க..

சச்சின், டிராவிட்டை பாருங்க..

இந்த நேரத்தில்தான் இளம் வீரர்கள் சச்சின் டெண்டுல்கரையும், ராகுல் டிராவிட்டையும் நினைவில் நிறுத்த வேண்டும். ஜாம்பவான்களான அவர்கள் இருவருமே ஒரே மாதிரி பந்து வீச்சில் தொடர்ந்து அவுட் ஆவதை விரும்புவதில்லை. உடனடி.யாக தங்கள் பேட்டிங் ஸ்டைலை மாற்றிக்கொண்டுவிடுவார்கள். அந்த ஒழுக்கம், அர்ப்பணிப்பு அனைத்து வீரர்களுக்கும் இருக்க வேண்டும்.

கொஞ்சம் பொறுத்தால் காப்பாற்றியிருக்கலாமே..

கொஞ்சம் பொறுத்தால் காப்பாற்றியிருக்கலாமே..

நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற மான்செஸ்டரில் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. எனவே 4வது, ஐந்தாவது நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி தடை பட வாய்ப்பு இருந்தது. இந்திய அணி இரு இன்னிங்சுகளிலும் தலா 100 ஓவர்கள் நிலைத்து நின்றிருந்தாலே ஆட்டம் டிராவில் முடிந்திருக்கும். குறிப்பாக எதிரணியின் முக்கியமான இரு பந்து வீச்சாளர்கள் காயத்தால் பந்து வீசாத நிலையிலும் இந்தியாவால் அதை செய்ய முடியவில்லை. இரு இன்னிங்சுகளையும் சேர்த்தால்கூட 100 ஓவர்கள் இந்தியா பேட்டிங் செய்யவில்லை" என்று விஜய் தாகியா தெரிவித்தார்.

காரணம் இதுதான்..

காரணம் இதுதான்..

இங்கிலாந்து அணியின் முன்னாள் ஓப்பனர், ஜெப்ரி பாய்காட் கூறுகையில் "லாட்ஸ் டெஸ்டில் இந்தியா வென்றபோது, அந்த அணியோடு ஒப்பிடும்போது இங்கிலாந்து மிகவும் பின்தங்கியிருந்தது. ஆனால் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோஹ்லியும், தாங்கிபிடிக்க வேண்டிய பூஜாராவும் தொடர் முழுக்க ரன் அடிக்காமல் இருப்பதுதான் இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டது" என்றார்.

Story first published: Tuesday, August 12, 2014, 13:07 [IST]
Other articles published on Aug 12, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+