கேட்ச்.. அப்புறம் லபக்.... வங்கதேசத்தை வறுத்தெடுக்க இந்திய வீரர்கள் செய்யும் பயிற்சியைப் பாருங்க!
மெல்போர்ன்: உலக கோப்பை காலிறுதி போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்வதற்காக இந்திய அணி மின் ஒளியின் கீழ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
உலக கோப்பை காலிறுதி போட்டியில் நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு இப்போட்டி தொடங்கும்.

அதிகாலை
இதையடுத்து கடந்த இரு நாட்களாகவே இந்திய வீரர்கள் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலையிலேயே மெல்போர்ன் மைதானத்திற்கு வந்த இந்திய வீரர்கள், சிறிது நேரம் மைதானத்தில் ஜாகிங் சென்றனர். பிறகு வார்ம்-அப்களில் ஈடுபட்டனர்.

பேட்டிங் பயிற்சியில்லை
மெல்பர்னில் லேசான தூரல் காணப்படுகிறது. தூரலுக்கு நடுவே இந்திய வீரர்கள் இப்பயிற்சிகளை மேற்கொண்டனர். அதேநேரம் பிட்ச் மூடப்பட்டிருந்ததால் பேட்டிங் பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபடவில்லை.

கேட்ச்
பந்தை உயரத்தில் அடித்து அதை ஓடிச் சென்று கேட்ச் செய்யும் பயிற்சியை, மின் ஒளியின் கீழ் வீரர்கள் மேற்கொண்டனர். பகலிரவு ஆட்டமாக மெல்போர்னில் போட்டி நடைபெற உள்ளதால், மின் வெளிச்சத்தில் கேட்ச் பிடிக்கும் பயிற்சியை அவர்கள் மேற்கொண்டனர்.

பெரும்பாலும் லபக்
பெரும்பாலான கேட்ச்சை வீரர்கள் பிடித்தனர். கைதட்டி சக வீரர்கள் உற்சாகம் கொடுத்தனர்.

கால்பந்தாட்டம்
இதன்பிறகு சிறிது நேரம், வீரர்கள், கால் பந்தாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலும், இந்திய வீரர்களின் கிரிக்கெட் பயிற்சிக்கு நடுவே, கால் பந்தாட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அதை செய்தனர். நேற்று மற்றும இன்று இப்பயிற்சிகளை இந்திய வீரர்கள் மேற்கொண்டனர்.


Click it and Unblock the Notifications