என் மகனை பார்த்து அழுதேன்.. வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள்.. பும்ரா உருக்கம்
மும்பை : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் வெற்றி பெற்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா தான்.
பல நெருக்கடியான போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி எதிரணிக்கு கடும் அழுத்தத்தை பும்ரா கொடுத்தார். 30 பந்துகளுக்கு 30 ரன்கள் தேவை என்ற நிலை இந்திய அணிக்கு இறுதிப்போட்டியில் இருந்தது. அப்போது பும்ரா சிறப்பாக இரண்டு ஓவர்கள் வீசி தென்னாப்பிரிக்காவை திணற வைத்தார்.

இதனால் பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற வெற்றி விழாவில் பும்ராவை தேசத்தின் சொத்து என்று அறிவிக்க தாம் கையெழுத்தை இட ஆர்வமாக இருப்பதாக விராட் கோலி தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய பும்ரா டி20 உலக கோப்பையை வென்றது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என்று கூறினார்.
தமக்கு தற்போது ஒரு குழந்தை இருப்பதாகவும், அவர் முன் டி20 உலக கோப்பையை வென்றது நினைத்து நான் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறினார். மகன் முன் இந்த உலகக் கோப்பை வென்றதை அடுத்து தாம் மகிழ்ச்சியில் அழுததாக குறிப்பிட்ட பும்ரா தற்போது ரசிகர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவும் வரவேற்பும் என் வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்று கூறினார்.
மேலும் வான்கடே மைதானம் தமது வாழ்வில் முக்கிய அங்கமாக வகிப்பதாக பும்ரா தெரிவித்தார். 17 வயது உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இருந்து தம் மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடி வருவதாக சுட்டிக்காட்டிய பும்ரா, தன்னது கிரிக்கெட் வளர்ச்சிக்கு மும்பை வான்கடே மைதானம் மிகப்பெரிய ஒரு கருவியாக இருந்ததாகவும் பும்ரா கூறியுள்ளார்.
Story first published: Thursday, July 4, 2024, 22:30 [IST]
Other articles published on Jul 4, 2024


Click it and Unblock the Notifications