Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியின் மாஸ் அஸ்திரம்.. 3 பேர் பார்முலாவை கொண்டு வர முடிவு.. சென்னையில் நடக்க போகும் தரமான சம்பவம்

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பவுலிங் ஆர்டரில் முக்கியமான மாற்றம் செய்யப்படும் என்று கூறுகிறார்கள்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. சென்னையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பண்ட், சாகா, பாண்டியா, கே. எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், குல்தீப், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்திய அணியில் நாளை ஆட போகும் வீரர்கள் யார் என்பது கேள்வியாக உள்ளது. ஆடும் 11 பேர் கொண்ட அணியில் யார் களமிறங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கான ஆலோசனைகள் தற்போது நடந்து வருகிறது.

சென்னை

சென்னை

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பவுலிங் ஆர்டரில் முக்கியமான மாற்றம் செய்யப்படும் என்று கூறுகிறார்கள். அதன்படி இந்திய அணி 5 பவுலர்களுடன் களமிறங்கும். இதில் 3 பேர் ஸ்பின் பவுலர்கள் என்று கூறப்படுகிறது.

மூன்று ஸ்பின்

மூன்று ஸ்பின்

ஆம் மூன்று ஸ்பின் பவுலர்கள், இரண்டு ஸ்பீட் பவுலர்களுடன் நாளை இந்திய அணி களமிறங்கும், அஸ்வின், குல்தீப் இருவரும் ஆடுவது உறுதி. மூன்றாவதாக வாஷிங்க்டன் சுந்தர் அல்லது அக்சர் பட்டேல் இருவரில் ஒருவர் களமிறங்க வாய்ப்புள்ளது. இதனால் மூன்று ஸ்பின் பவுலர்கள் ஆடுவது உறுதியாகி உள்ளது.

ஸ்பீட்

ஸ்பீட்

ஸ்பீட் பவுலர்களில் பும்ரா, இஷாந்த் சர்மா களமிறங்க வாய்ப்புள்ளது. சென்னை பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பின் பவுலிங்கிற்கு ஏதுவாக இருக்கும். அதேபோல் இங்கிலாந்து அணி ஸ்பின் பவுலிங்கில் திணறும்.

சென்னை பிட்ச்

சென்னை பிட்ச்

சென்னை பிட்ச் கூட இதற்கு ஏற்றபடி மாற்றப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் நடக்கும் போட்டி இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிராக கோலி இந்த அஸ்திரத்தை கோலி எடுப்பார் என்கிறார்கள்.

Story first published: Thursday, February 4, 2021, 11:20 [IST]
Other articles published on Feb 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+