
சென்னை
இந்த நிலையில் இதுவரை நடந்துள்ள இரண்டு நாள் ஆட்டத்திலும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி உள்ளது. பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி இருக்கிறது. ஆனாலும் கூட இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டு இருக்கிறார்கள்.இந்திய அணி இங்கிலாந்து அதிக டார்கெட் விதிக்கும் திட்டத்தில் இருக்கிறது.

இன்று ஆட்டம்
இங்கிலாந்து அணி இந்தியாவை விட 249 ரன்கள் பின்னடைவை சந்தித்து உள்ளது . இந்திய அணியில் 420 ரன்கள் வரை இந்திய அணி இங்கிலாந்துக்கு டார்கெட் விதிக்குமென்று கூறப்படுகிறது.இதனால் இந்திய அணி இன்னும் கூடுதலாக 170 ரன்கள் வரை எடுக்கும் திட்டத்தில் உள்ளது.

திட்டம்
இதற்காக ரோஹித் சர்மாவை கோலி நம்பி இருக்கிறார். காரணம் இந்திய அணியில் ரோஹித் சர்மா மட்டுமே தற்போது ஸ்வீப் ஷாட்களை ஆடுகிறார். இதனால் அவர்தான் 3வது நாள் ஆட்டத்தில் ஸ்பின் பவுலர்களை எதிர்கொள்ள முடியும் என்று கோலி நம்புகிறார். அவரை விட்டால் பண்ட் ரன் அடிக்க முடியும்.

ரோஹித் சர்மா
இதனால் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி இன்று இரண்டாவது டீ பிரேக் வரை பேட்டிங் செய்யும். இதற்குள் கூடுதலாக 170 ரன்களை எடுக்க வேண்டும் என்பதே இந்திய அணியின் திட்டம். இதில் ரோஹித் நாட் அவுட்டாக இருக்க வேண்டும் என்று கோலி நம்புகிறார் என்கிறார்கள். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்று இரண்டாவது டீ பிரேக் வரைதான் பேட்டிங் செய்யும் என்று கூறப்படுகிறது.

எப்படி
இதன் மூலம் இந்திய அணி இங்கிலாந்துக்கு 420 ரன்களை டார்கெட் வைக்கும். அதன்பின் கடைசி ஒன்றரை நாளில் இங்கிலாந்து இந்த ரன்களை எடுக்க வேண்டி இருக்கும். பிட்ச் மோசமாக மாறிவிடும் என்பதால் இங்கிலாந்து அணியால் இவ்வளவு ரன்களை எடுக்க முடியாது.


Click it and Unblock the Notifications