Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு டீமை பார்த்து இருக்க மாட்டீங்க.. சென்னையில் கோலி செய்ய போகும் சம்பவம்.. இங்கிலாந்து ஷாக்!

சிட்னி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி புதிய அணியுடன் களமிறங்கும் என்று கூறுகிறார்கள். பேட்டிங் மற்றும் ஸ்பின் பவுலிங் மீது கவனம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி இந்த வாரம் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பண்ட், சாகா, பாண்டியா, கே. எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், குல்தீப், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதிய அணி

புதிய அணி

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி புதிய ஆடும் அணியுடன் களமிறங்கும் என்று கூறுகிறார்கள். பேட்டிங் மற்றும் ஸ்பின் பவுலிங் மீது கவனம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் கண்டிப்பாக 5 பவுலர்கள் இடம்பெறுவார்கள். இதில் மாற்றம் இல்லை.

 ஐந்து பவுலர்கள்

ஐந்து பவுலர்கள்

இந்த ஐந்து பவுலர்களில் இரண்டு பேர் ஸ்பின் பவுலர்கள், மூன்று பேர் ஸ்பீட் பவுலர்கள். இந்த 5 பேரும் நன்றாக பேட்டிங் செய்யும் வகையில் அணி தேர்வை செய்ய இந்திய அணி முடிவு செய்துள்ளது. அதாவது 10 வீரர்கள் வரை சிறப்பாக பேட்டிங் செய்யும் வகையில் அணியை உருவாக்க முடிவு செய்துள்ளனர்.

அஸ்வின்

அஸ்வின்

அதன்படி இந்திய அணியில் அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர், சிராஜ், பும்ரா, ஷரத்துல் தாகூர் அல்லது இஷாந்த் சர்மா ஆகியோர் பவுலர்களாக களமிறங்க உள்ளது. இதில் இஷாந்த் சர்மாவை தவிர அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர், சிராஜ், பும்ரா, ஷரத்துல் தாகூர் ஐந்து பேரும் நன்றாக பேட்டிங் செய்வார்கள்.

ஷரத்துல் தாக்கூர்

ஷரத்துல் தாக்கூர்

இதனால் ஷரத்துல் தாக்கூர் - இஷாந்த் இடையே போட்டி இருக்கும். அதேபோல் சுந்தருக்கு பதிலாக அக்சர் பட்டேல் களமிறங்கினால் அவரும் நன்றாக பேட்டிங் செய்வார். இதனால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் இதுவரை இல்லாத அளவிற்கு வலிமையாக இருக்க போகிறது.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

அதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா. விராட் கோலி, ரஹானே, புஜாரா, சுப்மான் கில், பண்ட், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர், ஷரத்துல் தாக்கூர், சிராஜ், பும்ரா ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது. இதனால் அணியின் பவுலிங், பேட்டிங் இரண்டும் மாஸ் வலிமை அடையும் என்று கூறுகிறார்கள்.

Story first published: Monday, February 1, 2021, 10:16 [IST]
Other articles published on Feb 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+