Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல தோனி இல்லைன்னா இந்தியாவுக்கு தான் உலக கோப்பை..! பிரபல ஜோதிடர் கணிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி

மும்பை: அணியில் தோனி இல்லையென்றால் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை கைப்பற்றும் என்று பிரபல ஜோதிடர் கிரீன் ஸ்டோன் லோபோ கணித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ம் தேதி துவங்குகிறது. உலகின் பெரிய கிரிக்கெட் திருவிழாவை காண இப்போது ரசிகர்கள் தயாராகி வருகின்றன.

கிட்டத்தட்ட அனைத்து அணிகளுமே உலக கோப்பைக்கான கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளன. விராட் கோலி தலைமையில் இந்திய அணி களம் இறங்குகிறது.

எந்த அணிகள்?

எந்த அணிகள்?

தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படி களம் இறங்குகின்றன. மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.

நம்பிக்கை

நம்பிக்கை

இந்த ஆண்டு கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை ஜெயிக்கும் என்று இந்திய ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். நிச்சயம் இந்திய அணி தான் கோப்பையை கைப்பற்றும் என்று பல முன்னாள் கேப்டன்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பிரபல ஜோதிடர்

பிரபல ஜோதிடர்

இந்நிலையில் 2011 மற்றும் 2015 உலக கோப்பை தொடரின் சாம்பியனை சரியாக கணித்த பிரபல ஜோதிடர் கிரீன் ஸ்டோன்லோபோ, இந்த ஆண்டு எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்று கணித்துள்ளார்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

இதுகுறித்து லோபோ கூறுகையில், ‘இந்திய கேப்டன் விராட் கோலியின் பிறந்த ஆண்டு 1986 அல்லது 1987 ஆக இருந்தால் இந்தாண்டு உலக கோப்பை வெல்ல அவருக்கு வாய்ப்பு அமைந்திருக்கும். ஆனால், அவர் பிறந்த ஆண்டு 1988. எனவே, சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு குறைவு.

தோனிக்கு நேரம் சரியில்லை

தோனிக்கு நேரம் சரியில்லை

தனிப்பட்ட முறையில் தோனி மீது மதிப்பு அதிகம். பொதுவாகவே அவருக்கு அதிக அதிர்ஷ்டம் உள்ளது. ஆனால் தற்போது தோனிக்கும் நேரம் சரியில்லை. ஒருவேளை உலக கோப்பை அணியில் தோனி இடம் பெறாமல் இருந்திருந்தால், இந்திய அணிக்கு வாய்ப்பு இருந்திருக்கும் என்றார்.

Story first published: Friday, April 26, 2019, 22:38 [IST]
Other articles published on Apr 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+