Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க ஆடுங்க.. நடராஜனுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ரஹானே.. இந்திய அணியில் 3 அதிரடி மாற்றங்கள்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றது.

இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி சிறப்பான திட்டமிடலுடன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. கோலி, ஷமி இல்லாமலே ஆஸ்திரேலியாவை இந்திய அணி வீழ்த்தியது.

வீழ்த்தியது

வீழ்த்தியது

இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. இந்திய அணிக்குள் மூன்று முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. அணியின் ஓப்பனிங் வீரர் மயங்க் அகர்வால் நீக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

ஓப்பனிங்

ஓப்பனிங்

இந்திய அணியின் ஓப்பனிங் வீரர்களில் சுப்மான் கில் மட்டுமே நன்றாக ஆடி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் மயங்க் அகர்வாலை நீக்கிவிட்டு, அவரின் இடத்தில் ரோஹித் சர்மாவை கொண்டு வர இந்திய அணி முடிவு செய்துள்ளது. அதேபோல் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹனுமா விஹாரி நீக்கப்பட உள்ளார்.

நீக்கம்

நீக்கம்

இவரின் பவுலிங் ஆப்ஷனுக்காகவே தற்போது இந்திய அணியில் இருக்கிறார். ஆனால் இந்திய அணியில் 5 பவுலர்கள் இருப்பதால் இவருக்கு பவுலிங் வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை. இந்த நிலையில் இவர் வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்படுகிறார். இதன் காரணமாக விஹாரியை நீக்கிவிட்டு அணிக்குள் கே . எல் ராகுலை கொண்டு வர இந்திய அணி முடிவு செய்துள்ளது.

நடராஜன்

நடராஜன்

அதேபோல் உமேஷ் யாதவ் காரணமாக வெளியேறி உள்ளார். இவருக்கு பதிலாக சைனி, ஷரத்துல் வருவார்களா என்று கேள்வி எழுந்த நிலையில், இந்திய அணிக்குள் நடராஜன்தான் வருவார் என்பது உறுதியாகி உள்ளது. வலைப்பயிற்சியில் இவர் நன்றாக பவுலிங் செய்ததை பார்த்து இவருக்கு ரஹானே வாய்ப்பு வழங்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

Story first published: Thursday, December 31, 2020, 11:03 [IST]
Other articles published on Dec 31, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+