இதை மட்டும் சரியா பண்ணிடுங்க பாய்ஸ்..மத்ததை பார்த்துக்கலாம்.. கோலிக்கு பிசிசிஐ போட்ட "அந்த" உத்தரவு
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடுத்தடுத்து நடக்க உள்ளது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் சென்னையில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இங்கிலாந்து அணி வீரர்களும் சென்னையில் பயிற்சியை தொடங்கி உள்ளனர்.

இங்கிலாந்து
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றால், உலகக் கோப்பை டெஸ்ட் தொடருக்கு சென்றுவிடும்.தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட மாட்டோம் என்று ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

கொரோனா
கொரோனாவை காரணம் காட்டி ஆஸ்திரேலியா அணி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் நியூசிலாந்து அணி உலகக் கோப்பை டெஸ்ட் தொடரின் பைனல்ஸ் ஆட்டத்திற்கு தேர்வாகி உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்தை டெஸ்ட் தொடரில் வீழ்த்தினால் இந்தியா பைனல்ஸ் சென்றுவிடும்.

புள்ளிகள்
புள்ளிகள் அடிப்படையில் இந்தியா பைனல்ஸ் செல்ல பிரகாசமான வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்த நிலையில்தான் இங்கிலாந்தை இந்திய அணி முதல் இரண்டு டெஸ்டில் வீழ்த்த வேண்டும் என்று கோலிக்கு உத்தரவு பறந்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரிகள் கோலிக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

சென்னை
சென்னை பிட்ச் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும், இந்திய ஸ்பின் பவுலர்கள் எளிதாக விக்கெட் எடுக்க முடியும். இந்திய அணி நினைத்தால் முதல் இரண்டு டெஸ்ட்களில் சென்னையில் எளிதாக வெற்றிபெற முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

மாற்றம்
இதனால் இந்திய அணியை சென்னை பிட்சுக்கு ஏற்றபடி தயார் செய்யும் படி கோலிக்கு உத்தரவு பறந்துள்ளது. முதலில் இரண்டு டெஸ்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்றுவிடும். மற்றதை பார்த்துக்கொள்ளலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இந்தியா அணி சென்னை டெஸ்டில் வெற்றிபெற அதிக முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications