Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷாக்கிங்காக இருக்கிறது..வெளிப்படையாக சொன்ன கோலி.. சென்னையில் டாஸ் வென்ற இந்தியா.. பேட்டிங் தேர்வு!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது .

இங்கிலாந்திற்கு எதிராக நடைப்பெற உள்ள கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஏற்கனவே தோல்வி அடைந்துவிட்டது.

இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் தற்போது சென்னையில் நடக்கிறது . கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள், டி 20 தொடர் முழுக்க அகமதாபாத்தில் நடக்க உள்ளது. அதன்பின் புனேவில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளது.

இன்று மேட்ச்

இன்று மேட்ச்

இந்த நிலையில், இந்த கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, ரஹானே, பண்ட், சிராஜ், இஷாந்த் சர்மா, அஸ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் இன்று விளையாடுகிறார்கள்.

மாற்றம்

மாற்றம்

முதல் போட்டியில் நன்றாக ஆடினாலும் பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இவருக்கு பதிலாக சிராஜ் வந்துள்ளார். அதேபோல் அணிக்குள் சுந்தருக்கு பதிலாக அக்சர் பட்டேல் மற்றும் நதீமிற்கு பதிலாக குல்தீப் யாதவ் வந்துள்ளனர்.

எப்படி

எப்படி

இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன் இல்லாத நிலையில் போர்ட் ஆடுகிறார். டாம் பெஸ்சூக்கு பதிலாக பென் போக்ஸ், ஒலி ஸ்டோன் ஆகியோர் இன்று விளையாடுகிறார்கள். சென்னையில் சிறப்பாக ஆடும் மொயின் அலி அணிக்குள் வந்துள்ளார்.

 காரணம் என்ன

காரணம் என்ன

முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தது ஷாக்கிங்காக இருக்கிறது என்று கோலி குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் இந்த முறை வீரர்கள் சிறப்பாக தயாராகி உள்ளனர். சில வீரர்கள் நன்றாக ஆடினாலும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. வீரர்களின் மைண்ட் செட்டை பொறுத்தே இன்று ஆட்டம் இருக்கும், என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Saturday, February 13, 2021, 9:48 [IST]
Other articles published on Feb 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+