இந்திய அணி பேட்டிங்.. ப்ளேயிங் 11-ல் 2 தமிழக வீரர்களுக்கு ஜாக்பாட்.. ரோகித் சர்மா பக்கா திட்டம்!
மெல்பேர்ன்: பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி அட்டகாசமான ப்ளேயிங் 11ல் களமிறங்கியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று மெல்பேர்ன் நகரத்தில் தொடங்கியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

பாக். போட்டி
கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் பெற்ற தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் இந்தியா பலமான ப்ளேயிங் 11ல் களமிறங்குகிறது. பேட்டிங்கை பொறுத்தவரையில் வழக்கம் போல ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறங்குகின்றனர். இவர்களை தொடர்ந்து விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நல்ல ஃபார்மில் விளையாடுகின்றனர்.

பண்ட் நீக்கம்
லோயர் ஆர்டரை பொறுத்தவரையில் பெரும் குழப்பம் இருந்து வந்த சூழலில் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றுள்ளார். இதே போல ஹர்திக் பாண்ட்யாவும் அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் அதிரடி ஃபார்மில் உள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்கு டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன் இல்லை.

சுழற்பந்துவீச்சாளர்கள்
சுழற்பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் முதன்மை வீரராக அக்ஷர் பட்டேல் இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டரில் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அஸ்வின் விளையாடியுள்ளார். ஸ்பின்னர்களுக்கு பெரிய அளவில் உதவி இருக்காது என்பதால் யுவேந்திர சாஹல் உட்காரவைக்கப்பட்டுள்ளார்.

பவுலிங்
வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் சீனியர் வீரர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோர் முதன்மை பவுலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல்-ல் கலக்கிய ஹர்ஷல் பட்டேல் கடந்த சில போட்டிகளாக டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குகிறார். இதனால் அர்ஷ்தீப் சிங் 3வது பவுலராக விளையாடுகிறார்.


Click it and Unblock the Notifications