Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சின்ன பையன் பாஸ் நீங்க... ஓரமா போய் உட்காருங்க.. அப்பறம் சான்ஸ் தரோம்.. இளம் வீரரை ஒதுக்கும் கோலி!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக நாளை நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இளம் பவுலர் ஒருவர் இடம்பெற மாட்டார் என்று கூறுகிறார்கள்.

இந்தியா இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நாளை சென்னையில் தொடங்குகிறது.

இந்த தொடரில் வெற்றிபெற்றால் இந்திய அணி டெஸ்ட் உலகக் கோப்பை பைனல்ஸ் போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெறும். இதனால் இந்திய அணி இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

சென்னை

சென்னை

இங்கிலாந்துக்கு எதிராக நாளை நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இளம் பவுலர் முகமது சிராஜ் இடம்பெற மாட்டார் என்று கூறுகிறார்கள். இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பவுலிங் செய்தார். பும்ரா காயம் அடைந்த பின் பொறுப்பாக ஆடினார்.

பவுலிங்

பவுலிங்

இந்திய அணியின் ஸ்பீட் பவுலிங்கை இவர்தான் வழி நடத்தினார். அதேபோல் கடைசி டெஸ்டில் ஒரே இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்து மாஸ் காட்டினார். இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இவர் அட வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

 இங்கிலாந்து டெஸ்ட்

இங்கிலாந்து டெஸ்ட்

சென்னையில் நடக்கும் இங்கிலாந்து டெஸ்டில் இந்திய அணியில் இரண்டு ஸ்பீட் பவுலர்கள் மட்டுமே ஆடுவார்கள். இதனால் பும்ரா, இஷாந்த் சர்மா மட்டுமே ஆடுவார்கள். இஷாந்த் சர்மா இந்திய அணியில் கம்பேக் கொடுக்க உள்ளார். காயத்திற்கு பின் மீண்டும் வருகிறார்.

 காயம்

காயம்

காயத்தில் இருந்து இப்போதுதான் இஷாந்த் சர்மா மீண்டுள்ளார். இதனால் வயது மற்றும் முன்னுரிமை அடிப்படியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க கோலி திட்டமிட்டுள்ளார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிராஜ் ஆட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

Story first published: Thursday, February 4, 2021, 11:51 [IST]
Other articles published on Feb 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+