Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக் இல்லை.. முதல் டி20க்கான இந்திய ப்ளேயிங் 11.. மிடில் ஆர்டரில் இப்படி ஒரு மாற்றமா??

மொஹாலி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்தியாவின் ப்ளேயிங் 11ல் எதிர்பார்க்காத மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது.

முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு பஞ்சாப்பில் உள்ள மொஹாலி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

முதல் டி20

முதல் டி20

இந்த போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் இருந்த அனைத்து குழப்பங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது. இந்திய அணியின் டாப் ஆர்டர் உறுதி செய்யப்பட்டுவிட்ட சூழலில் மிடில் ஆர்டரில் தான் குழப்பமே இருந்தது. அதாவது ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரில் யாருக்கு வாய்ப்பு என்ற விவாதம் சூடுபிடித்தது. ஆனால் தற்போது ரிஷப் பண்ட்-க்கு தான் அதில் வெற்றி கிடைத்துள்ளது.

தகவல் கசிந்தது

தகவல் கசிந்தது

இதுகுறித்து இந்திய அணி தரப்பில் இருந்து வெளியான தகவலில், ஆஸ்திரேலிய தொடரில் இடதுகை வீரரான ரிஷப் பண்ட்-ஐ தான் பயன்படுத்தி பார்க்கவுள்ளதாக கூறியுள்ளனர். அவரின் செயல்பாட்டை பார்த்த பின்பு தான் தினேஷ் கார்த்திக்கி-ன் நிலைமை குறித்து யோசிக்கப்படும். இதே போல தீபக் ஹூடாவையும் வெளியில் உட்காரவைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

கடந்த சில போட்டிகளில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டதால், அவருக்கு அடுத்தபடியாக தீபக் ஹூடா தான் விளையாடினார். ஆனால் இந்த முறை ஹூடாவுக்கு மாற்றாக அக்‌ஷர் பட்டேல் களமிறங்கவுள்ளார். ரவீந்திர ஜடேஜாவை போலவே இடதுகை ஸ்பின்னர் மற்றும் பேட்ஸ்மேனாகவும் உதவுவார் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பவுலிங் யூனிட்

பவுலிங் யூனிட்

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் முன்னணி வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் மீண்டும் கம்பேக் தருகின்றனர். இவர்களுடன் மற்றொரு நட்சத்திர வீரரான புவனேஷ்வர் குமாரும் சேர்க்கப்பட்டு இந்த காம்போவை பரிசோதனை செய்து பார்க்கவுள்ளனர். ஹர்திக் பாண்ட்யா 4வது வேகப்பந்துவீச்சாளராக இருப்பார். இதனால் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் உட்கார வைக்கப்படவிருக்கிறார். சுழற்பந்துவீச்சில் அக்‌ஷர் பட்டேலுடன், யுவேந்திர சாஹல் விளையாடுகிறார் எனக் கூறப்படுகிறது.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல், யுவேந்திர சாஹல்

Story first published: Tuesday, September 20, 2022, 13:34 [IST]
Other articles published on Sep 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+