For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வியர்வை சிந்த பயிற்சி.. படு தீவிரம் காட்டும் புஜாரா - ரோகித்.. இணையத்தை கலக்கும் பயிற்சி வீடியோ

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்காக இந்திய வீரர்கள் படு தீவிரமாக தயாராகும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை தொடர்ந்து, இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

முக்கியமான போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சி போட்டிகளில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக முதல் தர பயிற்சி போட்டியில் விளையாடாததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடர்க்கு முன்னதாக அந்நாட்டின் கவுண்டி அணிகளுடன் பயிற்சி போட்டிகளுக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.

போட்டி விவரங்கள்

போட்டி விவரங்கள்

கவுண்டி அணிக்கும் இந்திய அணிக்கு இடையேயான இந்த போட்டி வரும் ஜூலை 20ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகள் துர்ஹாம் நகரத்தில் உள்ள எமிரெட்ஸ் ரிவர்சைட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

படு தீவிரம்

படு தீவிரம்

இங்கிலாந்தில் குடும்பத்தினருடன் ஜாலியாக சுற்றி வந்த இந்திய அணி வீரர்கள் தற்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு துர்ஹாம் நகரத்திற்கு வந்தடைந்துள்ளனர். இதனையடுத்து தங்களது வலைப்பயிற்சியை இன்று தொடங்கினர். ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் திணறிய நிலையில் படு தீவிரமாக தற்போது தயாராகி வருகின்றனர்.

Recommended Video

India -வின் 2nd Round ஆட்டம் வேற மாதிரி இருக்கும்.. Virat Kohli சொன்ன முக்கிய தகவல்
பந்துவீச்சு

பந்துவீச்சு

பந்துவீச்சை பொறுத்தவரை அஸ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் ஆகியோர் கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முகமது சிராஜுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, July 17, 2021, 21:48 [IST]
Other articles published on Jul 17, 2021
English summary
TeamIndia's nets session at the Durham County Cricket Club for Practice match against County team
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+