For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான் மீண்டு வர்றதுக்கு என்னோட அணி நல்லா ஹெல்ப் பண்ணுச்சு... விராட் கோலி பரவசம்

அபுதாபி : ஐபிஎல் போட்டிகளில் தன்னுடைய அணியினர் சிறப்பாக விளையாடியதால் தான் மோசமான ஆட்டத்திலிருந்து மீண்டுவர கால அவகாசம் கிடைத்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் முதல் மூன்று போட்டிகளில் கேப்டன் விராட் கோலி 14, 1 மற்றும் 3 ரன்களை மட்டுமே எடுத்தார். இதனால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார்.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆர்சிபியின் கடந்த போட்டியில் 53 பந்துகளில் 72 ரன்களை குவித்து தன்னுடைய மறுபிரவேசத்தை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

3 போட்டிகளில் சொதப்பிய விராட்

3 போட்டிகளில் சொதப்பிய விராட்

ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி, இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றியை சுவைத்துள்ளது. இந்த போட்டிகளில் அணியின் கேப்டன் விராட் கோலி முதல் 3 போட்டிகளில் 14, 1 மற்றும் 3 ரன்களை மட்டுமே எடுத்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார்.

விராட்டின் மறுபிரவேசம்

விராட்டின் மறுபிரவேசம்

கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 53 பந்துகளில் 72 ரன்களை குவித்து தன்னுடைய மறுபிரவேசத்தை கோலி உறுதி செய்துள்ளார். இதன்மூலம் தன்மீதான விமர்சனங்களை உடைத்தெறிந்துள்ளார். மீண்டும் பார்மிற்கு வந்துள்ளார்.

அணியினரின் உதவி

அணியினரின் உதவி

இந்நிலையில் தான் விளையாடாவிட்டாலும் தன்னுடைய அணியினர் சிறப்பாக விளையாடியதால் தான் ரிலாக்சாக மீண்டு வருவதற்கு நேரம் எடுத்துக் கொண்டதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். கிரிக்கெட் அதிசயமான விளையாட்டு என்று கூறியுள்ள கோலி, தான் இந்த விளையாட்டை அதிகமாக நேசிப்பதை போலவே வெறுப்பதாகவும் தான் ஜோசிடம் கூறியதையும் தெரிவித்துள்ளார்.

தொடர்வது சிறப்பானது

தொடர்வது சிறப்பானது

தன்னுடைய அணி சிறப்பான துவக்கத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்ட கோலி, இதேபோல தொடர்வது மிகவும் சிறப்பானது என்றும் கூறியுள்ளார். மேலும் தேவ்தத் படிக்கல் சிறப்பான 3வது அரைசதத்தை 4 போட்டிகளில் அடித்துள்ளதற்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, October 4, 2020, 23:23 [IST]
Other articles published on Oct 4, 2020
English summary
Virat praised the 20-year-old Devdutt Padikkal, who yet again came good
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+