For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மெல்போர்ன்ல தொடர் மழை... பயிற்சி செய்ய முடியாமல் முடங்கிய இந்திய அணி

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ளது.

இதையொட்டி நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் சிட்னிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளன.

இதனிடையே மெல்போர்னில் மழை பெய்து வருவதால் இந்தியாவின் இன்றைய பயிற்சி ஆட்டங்கள் தடைப்பட்டுள்ளன.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி சிட்னியில் துவங்கி நடைபெறவுள்ளது. இதுவரை நடந்து முடிந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இந்த 3வது போட்டி இரு அணிகளுக்கிடையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

இந்த 3வது டெஸ்ட் போட்டியையொட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே மெல்போர்னில் பெய்துவரும் மழை காரணமாக அணியின் இன்றைய பயிற்சி ஆட்டங்கள் தடை பட்டுள்ளது. அணி வீரர்கள் ஹோட்டல் அறைகளில் முடங்கியுள்ளனர்.

ரோகித், வார்னர் பங்கேற்பு

ரோகித், வார்னர் பங்கேற்பு

இரு அணிகளிலும் முக்கியமான பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள. இந்த போட்டியில் இந்திய அணியின் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார். இதேபோல காயம் காரணமாக கடந்த இரு போட்டிகளில் பங்கேற்காத ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் இந்த போட்டியில் பங்கேற்று ஆடவுள்ளார்.

வீரர்கள் நாளை பயணம்

வீரர்கள் நாளை பயணம்

கொரோனா பரவல் காரணமாக சிட்னியின் 3வது டெஸ்ட் போட்டி நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீர்ந்துள்ள நிலையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 3வது போட்டி நடத்தப்படும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதையடுத்து நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் சிட்னிக்கு தங்களது பயணத்தை துவக்கவுள்ளன.

Story first published: Sunday, January 3, 2021, 13:09 [IST]
Other articles published on Jan 3, 2021
English summary
Practice session of Indian team didnt happen today due to rain
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+